தேவ.பேரின்பன் எழுதிய நூல்களில் சில:
சிறந்த மார்க்சிய அறிஞரும் சிந்தனையாளரும், முன்னாள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைப் பொது செயலாளருமான திரு தேவ. பேரின்பன் 1952 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் இளங்கலை அறிவியல் படிப்பினை முடித்தவர். 40 ஆண்டுகள் கம்யூனிஸ்ட் கட்சிக்காக முழுநேரப் பணியாளராக உழைத்தவர். ஏறத்தாழ 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். எட்டு ஆண்டுகாலம் "சமூக விஞ்ஞானம்" என்ற ஆய்விதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர். ஜனசக்தியில் 1979 முதல் சுமார் 3000க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளார். அவற்றில் 60 கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து "மார்க்சிய அரசியல்" என்ற நூலாக வெளியிட்டுள்ளார். தருமபுரி மாவட்ட வரலாற்றுப் பேரவையை உருவாக்கியவர்களுள் ஒருவர்.
தருமபுரியை அடுத்த பாப்பாரப்பட்டி அருகே உள்ள கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். உடல்நிலை பாதிக்கப்பட்டு பெங்களுருவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த இவர், 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் நாளன்று தனது 61 வது வயதில் காலமானார். அன்னாரது இறுதி அஞ்சலி பென்னாகரத்தில் உள்ள கரடிகுன்றில் நடைபெற்றது.

















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக