வியாழன், 11 அக்டோபர், 2018

தருமபுரி மாவட்டத்தில் தாவரங்கள் பெயர்களைக் கொண்ட ஊர் பெயர்கள்


ஓரிடத்தின் வரலாற்றையும் அந்த பகுதியில் வாழும் மக்களுடைய வாழ்வியல் முறைகளை அறிந்துகொள்ளவும் அந்த ஊரின் பெயர் குறித்த ஆய்வுகள் பெரிதும் உதவுகின்றன. ஊரின் பெயர்களில் உள்ள பல்வேறு கூறுகளில் பொதுத்தன்மை, சிறப்புத்தன்மை, தனி கூறுகள் என வகைப்படுத்தி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் நாம் தருமபுரி மாவட்டத்தில் உள்ள தாவரங்கள், ஏரிகள் மற்றும் குட்டைகளை அடைச்சொற்களாக கொண்ட ஊர்களையும் இங்கே வகைபடுத்தலாம். 
முதலாவதாக தாவரங்கள் பெயர்களைக் கொண்ட ஊர் பெயர்கள்.
தருமபுரி மாவட்டம் நாம் முன்னரே கூறியது மாதிரி முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும் ஒருங்கே அமையபெற்ற அதாவது அடர்ந்த காடுகளைக்கொண்ட மலைகளும் குன்றுகளும் வறண்ட காட்டுப்பகுதிகளையும், மேட்டுப்பாங்கான நிலப்பரப்பும் உடைய  மாறுபட்ட இயற்கை அமைப்புகளைக் கொண்ட ஒரு மாவட்டமாகும். எந்தெந்த தாவரங்கள் எந்தெந்த பகுதிகளில் வளர்கின்றனவோ அந்தந்த தாவரங்களின் பெயர்களை அடைச்சொற்களாகக் கொண்ட ஊர்பெயர்களாக வந்துள்ளன. பின்னாளில் பட்டி, ஹள்ளி, நகர் என்றெல்லாம் பொதுக்கூறுகள் கொண்ட ஊர்பெயர்கள் தொடருவதற்கு முன்பே தாவரங்கள் பெயர்களைக் கொண்ட ஊர்கள் உருவாகியிருக்கவேண்டும் என்பதும் இவைகள் காலத்தால் முந்தியவை என்பதும் திண்ணம்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஊர்பெயர்களில் தாவரங்களின் பெயர்களை அடைசொற்களாகக் கொண்ட ஊர்கள்:
வேப்பமரத்தூர்,
வேப்பிலைஹள்ளி.
வேப்பிலைப்பட்டியான் கொட்டாய்
வேப்பம்பட்டி
கொங்கவேம்பு
அத்திமரத்தூர்
புளியம்பட்டி
புளியமரத்தூர்
புளியமரத்துவலசு
துறிஞ்சிப்பட்டி
பலாமரத்துக்கொட்டாய்
நாகமரத்துப்பள்ளம்
பனந்தோப்பு
பனமரத்துப்பட்டி
எட்டிமரத்துக்குழி
எட்டிமரத்துப்பட்டி
எட்டிப்பள்ளம்
ஈச்சம்பட்டி
ஈச்சங்காட்டூர்
தேங்காமரத்துப்பட்டி
தென்னமரத்துக்கொட்டாய்
ஆலமரத்துப்பட்டி
ஆலங்கரை
ஆலமரத்தூர்
மாமரத்துப்பள்ளம்
மாமரத்துக்காடு
மாங்கரை
முருங்கமரத்துவலசு
ஆயாமரத்துப்பட்டி
வேளாம்பட்டி
பொரசமரத்துவளவு
எலந்தக்கொட்டபட்டி
நொச்சிக்குட்டை
கொய்யாமரத்துக்கொட்டாய்
எலுமிச்சனஹள்ளி
வெப்பாளம்பட்டி
வெப்பாளப்பட்டி
கருங்காளிமேடு
வரக்கொல்லை
மணல்பருத்திக்காடு
மூங்கில்மடுவு
சந்தனகொடிக்கால்
கெளாப்பாறை
கள்ளியூர்
துளசிக்காடு
சிந்தல்பாடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக