வியாழன், 29 நவம்பர், 2018

தருமபுரி வனக்கோட்டம்

 
தருமபுரி் வனக்கோட்டம் 1968 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந் தேதியில் அன்றைய விவசாயத்துறையின் அரசு ஆணைப்படி துவங்கப்பட்டது. பின்னர் 20-10-2003 ஆம் அன்று வருவாய்த்துறையின் ஆணைப்படி மறுஉருவாக்கம் செய்து 9-22004 முதல் செயல்பாட்டிற்கு வந்தது. இந்த வனக் கோட்டம் வடக்கே கிருஷ்ணகிரி மாவட்டத்தையும் கிழக்கே திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டத்தையும் தெற்கே சேலம் மாவட்டத்தையும் மேற்கே கர்நாடகத்தின் சாம்ராஜ் மாவட்டத்தையும் எல்லைகளாகக் கொண்டது. இதன் மொத்த நிலப்பரப்பளவு 4497.77 சதுர கி.மீ. ஆகும். இதில் மொத்த வனப்பரப்பளவு காப்புக்காடுகள் மற்றும் காப்பு நிலத்தையும் சேர்த்து 892.78 சதுர கி.மீ. அளவில் உள்ளது. இந்த வனக் கோட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம் ஹொகேனக்கல் என நான்கு சரகங்களை கொண்டுள்ளது. அத்துடன் ஊரக விறகுக் கோட்டம், நிலஅளவை மற்றும் குறியீட்டுச் சரகம் என தருமபுரியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது
தருமபுரி வனக்கோட்டத்திலுள்ள வனங்களின் வகைகள்:
1. தெற்கு உலர்கலப்பு இலையுதிர் காடுகள் - The Southern Tropical Dry Mixed Deciduous Forest 5A/C3
2. சோரியா தாலூரா துணை வகைக்காடுகள் (வரையறுக்கப்படவில்லை)
    The Shorea talura sub – type (sub- type not classified) 5/E4 
3.   இரண்டாம் நிலை உலர்ந்த இலையுதிர் காடுகள் - The secondary Dry Deciduous Forest 5/E
4.   உலர் இலையுதிர் புதர்க்காடுகள் - The Dry Deciduous Scrub Forest 5/2S1
5.   உலர் இலையுதிர் புதர்க் காடுகள் - The Dry Deciduous Scrub Forest 5D/S1
6.   வெப்ப மண்டல நதி காடுகள் -  The Dry Tropical Riverine Forest 5/1S1
7.    உலர் தேக்கு காடுகள் - Very Dry Teak Forest 7/C1
8.   வெப்ப மண்டல பசுமை மாறா ஈரக் காடுகள் - The Tropical Evergreen Shola Forest 7/C1 
9.   தெற்கு வெப்ப மண்டல முட்காடுகள் - The Southern Thorn Forest 6A/C1 
1௦. தெற்கு வெப்ப மண்டல புதர் காடுகள் - The Southern Thorn Scrub Forest 6A/DS1

நன்றி: Tamil Nadu Forest Department
Dharmapuri Forest Division, Dharmapuri


நஞ்சப்பன். என்.

1950 ஆம் ஆண்டு செப்டம்பர் 3-ந் தேதி பென்னாகரத்தில் பிறந்த இவர், சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்று, தமிழ் இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர். 1973 ஆம் ஆண்டு இந்திய பொதுவுடைமை கட்சியில் இணைந்து அரசியலுக்கு வந்தார். பென்னாகரம் நகரச் செயலாளராகவும், தருமபுரி மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும், ஹொகேனக்கல் உரிமைப் பாதுகாப்புக் குழு அமைப்பாளராகவும் இருந்து வருகிறார். 
1984  ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.கட்சியுடன் அமைந்த கூட்டணியில் சி.பி.ஐ. கட்சியின் சார்பில் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த இவர் மீண்டும் 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு 15498 வாக்குகள் பெற்று பி.ஸ்ரீனிவாசனிடம் வெற்றிபெற்றார். இடையில் 1986 ஆம் ஆண்டு பென்னாகரம் ஒன்றியக்குழுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவரது மனைவியின் பெயர் லட்சுமி. இவருக்கு செம்மலர், வெண்ணிலா என்ற இரு மகள்களும், கதிரவன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.
இவர் "புகைகளில் ஒரு புகைச்சல்", "பணியில் பூத்த நெருப்பு" ஆகிய 2 நூல்கள் எழுதியுள்ளார். 

டில்லி பாபு.பி.



திரு. டில்லி பாபு.பி.,   2௦௦6 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தருமபுரி மாவட்டம், அரூர் (தனி) தொகுதியில், சி.பி.ஐ. (எம்) சார்பில் நின்று 71030 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த கே. கோவிந்தசாமியைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். தொடர்ந்து இதே தொகுதியில்  சி.பி.ஐ. (எம்) சார்பில் அ.இ.அ.தி.மு.க. கூட்டணியுடன் இணைந்து 2௦11 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 777௦3 வாக்குகள் பெற்று, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பி.எம். நந்தனை தோற்கடித்து வெற்றி பெற்றார். 
பூரிவாக்கம் என்ற ஊரில் பரமசிவம்-ஜெயம்மாள் தம்பதியினருக்கு 1965 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 -ந் தேதி பிறந்த இவர் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர். 1982 ஆம் ஆண்டு முதல் சி.பி.எம். கட்சியில் இணைந்த இவர் 1983 ஆம் ஆண்டு இந்திய மாணவர் சங்கத்தில் பொறுப்பு வகித்தார். இவர் தற்போது தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினராகவும், தருமபுரி மாவட்டத்தின் சி.பி.எம். கட்சியின் மாவட்ட செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
இவறது மனைவியின் பெயர் காளியம்மாள். இவருக்கு பிடரல் காஸ்ட்ரோ என்ற மகனும், அருனப்பிரியா என்ற மகளும் உள்ளனர்.  

புதன், 28 நவம்பர், 2018

ஆர். முத்துக்கவுண்டர்


    
சேலம் மாவட்டம் வெள்ளாளப்பட்டி கிராமத்தில் 1918 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதியில் பிறந்தார். சென்னை பல்கலைக் கழகத்தில் பயின்றவர். இவர் பிரேமா என்பவரை 1948 ஆம் ஆண்டில் மணம் முடித்தார். இவருக்கு ௨ மகன்களும் 1 மகளும் உள்ளனர். விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். சிறந்த விவசாயியாக நெல், சோளம், நிலக்கடலை முதலான பயிர்களில் அதிக விளைச்சல் எடுத்தமைக்காக பல்வேறு பரிசுகளைப் பெற்றுள்ளார். இந்திய பாரளுமன்றத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது தேர்தல்களில் (1962-67 மற்றும்  1967-1971) தி.மு.க. சார்பில் வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் இவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் முறையே துரைசாமி கவுண்டர், டி.ஏ. வாஹித் ஆகியோரைத் தோற்கடித்துப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 
R.  முத்துக்கவுண்டர் 

இவர் மாநில விவசாயிகள் சங்கத்தின் நிர்வாக குழுவில் உறுப்பினராகவும், சேலம் மாவட்டத்தின் கிழங்கு பயிரிடுவோர் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். 
சோவியத் ரஷ்யா, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்வீடன், நெதர்லேண்ட், ஜப்பான், தெற்கு வியட்நாம், ஹவாய், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, சுவிட்சர்லாந்து முதலான நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அன்னாரது நூற்றாண்டு விழா மற்றும் 24 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி  22-9-2௦18 அன்று அரூரில் நடந்தது. இந்நிகழ்சியில் அமைச்சர்கள், பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், விவசாய சங்கத்தினர் மற்றும் கொங்கு பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டு  மரியாதை செய்தனர்.

தேவ. பேரின்பன்

தேவ.பேரின்பன் எழுதிய நூல்களில் சில: 
     
    
    
     
        
  

சிறந்த மார்க்சிய அறிஞரும் சிந்தனையாளரும், முன்னாள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைப் பொது செயலாளருமான திரு தேவ. பேரின்பன்  1952 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் இளங்கலை அறிவியல் படிப்பினை முடித்தவர். 40 ஆண்டுகள் கம்யூனிஸ்ட் கட்சிக்காக முழுநேரப் பணியாளராக உழைத்தவர். ஏறத்தாழ 20-க்கும்  மேற்பட்ட நூல்களை எழுதியவர்.  எட்டு ஆண்டுகாலம் "சமூக  விஞ்ஞானம்" என்ற ஆய்விதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர். ஜனசக்தியில் 1979 முதல் சுமார் 3000க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளார். அவற்றில் 60 கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து "மார்க்சிய அரசியல்" என்ற நூலாக வெளியிட்டுள்ளார். தருமபுரி மாவட்ட வரலாற்றுப் பேரவையை உருவாக்கியவர்களுள் ஒருவர். 
தருமபுரியை அடுத்த பாப்பாரப்பட்டி அருகே உள்ள கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்.  உடல்நிலை பாதிக்கப்பட்டு பெங்களுருவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த இவர், 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் நாளன்று தனது 61 வது வயதில் காலமானார். அன்னாரது இறுதி அஞ்சலி பென்னாகரத்தில் உள்ள கரடிகுன்றில் நடைபெற்றது. 

தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை, பாலக்கோடு


தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை, பாலக்கோடு
தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணையம் தமிழ்நாட்டில் 17 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை கொண்டுள்ளது. அதில் ஒன்றான தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையானது பாலக்கோடு வட்டத்தில் ஜர்தலாவை அடுத்த திம்மனஹள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது.  இந்த ஆலை 1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆண்டிற்கு சுமார் 1250 டன் கரும்பு அரவை செய்யும் வகையில் இந்த ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த உற்பத்தி 1987 முதல் 2000 டன் ஆக உயர்ந்ததுள்ளது. தேசிய விருது பெற்ற இந்த சர்க்கரை ஆலை 2006 ஆம் ஆண்டு ISO 9001 - 2000 தரச் சான்றிதழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.





டி.என்.வடிவேல் கவுண்டர்



தருமபுரியில்  15-6-1926 அன்று நடுப்பைய கவுண்டர் - குந்தியம்மாள் தம்பதியினருக்கு மகனாய் பிறந்தவர் வடிவேல் கவுண்டர்.  விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் சிறு வயது முதலே நாட்டுப்பற்று கொண்டவர்.  சுதந்திர இந்தியா மலர்ந்த பிறகே திருமணம் செய்து கொள்வது என்ற திடமான மனதுடன் இருந்தவர் அவ்வாறே சுதந்திரத்திற்கு பிறகு நடுப்பட்டி கிராமத்தை சேர்ந்த சின்னசாமி-முனியம்மாள் தம்பதியினரின் மகளான ராஜம்மாள் என்பவரைக் கரம்பிடித்தார்.  அன்னாருக்கு 6 புதல்வர்களும் 1 புதல்வியும் பிறந்தனர். 
1941 ஆம் ஆண்டு தருமபுரியில் சிறிய அளவில் பால் கொள்முதல் செய்து வியாபாரத்தைத் தொடங்கி படிப்படியாக வளர்ந்து வேல் பால் நிலையம் என்று தருமபுரியில் முன்னணி நிறுவனமாக மாற்றினார்.
1962 ஆம் ஆண்டு தருமபுரி சட்டமன்றதிற்கு சுயேட்சையாக நின்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. ஆர்.எஸ். வீரப்ப செட்டியார் அவர்கள் மறைவுக்குப் பின்னர் டி.என்.வடிவேல் கவுண்டர் தருமபுரி மக்களின் அன்பைப் பெற்றிருந்த காரணத்தால், பெருந்தலைவர் காமராசர் அவர்களின் ஆசியோடு 1965 ஆம் ஆண்டு தருமபுரியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் நின்று பெரு வெற்றிபெற்று தருமபுரி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றம் சென்றார்.  
தருமபுரி மாவட்டம் உருவாக முயற்சி எடுத்த திரு. ஆர்.எஸ். வீரப்ப செட்டியார் அவர்கள் மறைவுக்குப் பின்னர் டி.என்.வடிவேல் கவுண்டர்  அவர்களின் தொடர் முயற்சியால்  1965 ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்திலிருந்து பிரிந்து தருமபுரி தனி மாவட்டமாக உருவாக்கும் போது அதன் மாவட்டத் தலைநகராக  தருமபுரியே இருக்கவேண்டும் என்று அன்றைய முதலமைச்சர் திரு. பக்தவத்சலம் அவர்களிடம் கேட்டுப் பெற்றவர். 
தருமபுரி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்ட பிறகு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், அரசு தலைமை மருத்துவமனை மற்றும் பிற அரசு அலுவலகங்கள் ஒரே இடத்தில் அமைந்தால் மக்களுக்கு சிரமமின்றி இருக்கும் என்று கருதி சமந்தப்பட்ட நில உரிமையாளர்களிடம் பேசி அரசிடம் ஒப்படைத்தார். 
தருமபுரி அரசு மருத்துவமனை அமைக்க தனது 40 ஏக்கர் நிலத்தை வழங்கிய தருமபுரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஏ.எம். சுப்பிரமணிய செட்டியாருக்கும், தருமபுரி சட்ட மன்ற உறுப்பினர் பி.கே.சி. முத்துசாமிக்கும் சிலை அமைத்துப் பெருமை படுத்தியவர்.  வன்னிய குல சத்திரிய அறக்கட்டளை நிறுவி அதன் பெயரால் திருமண மண்டபம் காட்டினார். தருமபுரி அவ்வையார் பெண்கள் மேனிலைப்பள்ளியின் 15௦ வது ஆண்டுவிழாவில்  அந்த பள்ளியில் நிறுவ வெண்கலத்தால் ஆன அவ்வையார் சிலை அமைத்துக் கொடுத்துள்ளார்.  
தருமபுரி நகராட்சி மன்றத் தலைவராகவும் 1985 முதல் 1991 வரை இருந்து சிறந்த முறையில் பணியாற்றினார். இவர் நகர்மன்றத் தலைவராக இருந்தபோதுதான் அரசு மகப்பேறு மருத்துவமனை, நகர பேருந்து நிலையம், பஞ்சப்பள்ளி கூட்டுக்குடிநீர் திட்டம், வெண்ணாம்பட்டி அரசு குடியிருப்புகள் உருவாயின.  
டி.என்.வடிவேல் கவுண்டர் 25-07-1959 முதல் 1980 வரை தருமபுரி நகர கூட்டுறவு வங்கியின் இயக்குனராகவும்,  1980 - 1989 ஆண்டு வரை அவ்வங்கியின் தலைவராகவும், 1961 - 1979 ஆண்டு வரை தருமபுரி கூட்டுறவு வீட்டுவசதி சங்க இயக்குனராகவும் 1979 - 1989 ஆண்டு வரை இச்சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். 
தருமபுரி மாவட்ட வளர்ச்சிக்குப் பாடுபட்ட வடிவேல் கவுண்டர் 24-12-2011 அன்று மறைந்தார். 
  

செவ்வாய், 27 நவம்பர், 2018

ச. கிருஷ்ணமூர்த்தி


     விழுப்புரம் மாவட்டத்தில் செய்யாறு வட்டத்தில் அனுக்காவூர் என்ற ஊருக்கு அருகில் விலாரிப்பட்டு என்ற கிராமத்தில் சடைசாமி - பூமாது தம்பதியினருக்கு மகனாக 4-4-1949 அன்று பிறந்த இவர் தனது பள்ளிப்படிப்பை சென்னை மாநகராட்சி பள்ளியில் முடித்தார். தமிழிலும் வரலாற்றிலும் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் தொல்பொருள் துறையில் ஓராண்டு பட்ட மேற்படிப்பு பட்டையம் பெற்றுள்ளார். 
     தஞ்சை மாவட்ட அருங்காட்சியகத்தில் பணியாற்றியபோது ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளும் கையெழுத்துப் பிரதிகளையும் தேடி திரட்டியுள்ளார்.  தொல்லியல், வரலாறு தொடர்பாகப் பல ஆய்வுக்கட்டுரைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் இவர் எழுதி வெளியிட்டுள்ளார். 
    இவர் தருமபுரி அரசு அருங்காட்சியகத்தில் தொல்பொருள் அதிகாரியாகப் பணியாற்றியபொது பல கல்வெட்டுகளையும், பெருங்கற்கால ஓவியங்களையும் சிற்பங்களையும் கண்டுபிடித்துள்ளார். 
     இவர் எழுதிய "தருமபுரிவரலாறும் பிரகலாத சரித்திரமும்" என்ற நூல் தருமபுரி மாவட்ட வரலாற்றை அறிந்துகொள்ள உதவும் முக்கியமான நூல் என்பதில் ஐயமில்லை.
      தற்போது இவர் பணியிலிருந்து ஓய்வு பெற்று சென்னையில் வசித்து வருகிறார்.  

ஊட்டமலை



தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் கூத்தப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஊட்டமலை.  இந்த கிராமம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இக்கிராமத்தின் அமைவிடம் 12°07'46.5"N 77°46'06.3"E  ஆகும். 
ஓஹேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு சுமார் 2கி.மீ. தொலைவில் உள்ளது இந்த கிராமம்.  இங்கு 300 -க்கும்  அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. சிவியர் எனும் மீனவ சாதி பிரிவினைச் சேர்ந்த  இவர்களுக்கு பரிசல் ஓட்டுவது, மீன்பிடித்தல், ஆடு,மாடு வளர்ப்பு போன்றவைகள்தான் பிரதான தொழில்.  இவர்களுக்கு விவசாய நிலம் கிடையாது. இங்கு வாழும் மக்கள் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டூர் அணை கட்டும்போது அந்த பகுதியில் இருந்து பிழைப்பு தேடி இந்த கிராமத்தில் வந்து தஞ்சம் அடைந்தனர். 
காவிரி ஆறு கர்நாடக மாநிலத்தைக் கடந்து தமிழக எல்லையான அஜ்ஜிப்பாறை வழியாக, தெப்பகுழி, உகினி, ராசிமணல், பிலிகுண்டு வழியாக சுமார் 45 கி.மீ. தூரம் காப்புக்காடுகளுக்கு இடையே ஓடி ஓஹேனக்கல்லை அடைகிறது. இங்குள்ள மீனவர்கள் கடந்த 40 ஆண்டுகளாக ஊட்டமலை ஆலம்பாடியிலிருந்து கர்னாடக எல்லையான அஜ்ஜிபாறை வரை மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு மத்திய அரசின் 1897 ஆம் ஆண்டு 4 வது பகுதியில் கண்டவாறு இந்திய மீன்வளப் பிரிவு 6 சட்டத்தின்படி மேட்டூர் அணைக்கு வடக்கே காவிரி ஆற்றில் ஆலம்பாடியில் இருந்து வடக்கே பிலிகுண்டு முதல் அஜ்ஜிப்பாறை சங்கமம் வரை மீன்பிடிக்க மேட்டூர் மீன்வள உதவி இயக்குனர் மூலம் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதன்படி இவர்கள் மீன்பிடி உரிமம் வாங்கி இத் தொழிலை செய்து வருகின்றனர்.  இருப்பினும் உரிகம், அஞ்செட்டி வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து ஆற்றில் மீன்பிடிக்கச் செல்வதாகக் கூறி வனத்துறை இவர்களிடம் கெடுபிடி செய்வதால் மீன்பிடி தொழிலை செய்யமுடியாமல் தங்கள் வாழ்வாதாரம் நசுக்கப்படுவதாக இவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். மீனவர்கள் ஆற்றில் பிடித்து வரும் மீன்களை மீனவப் பெண்கள் சமைத்து ஓஹேனக்கல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு விற்றும் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.  இங்குள்ளவர்களில் சுமார் 400 பேர் பரிசல் ஒட்டி பிழைப்பு நடத்துகின்றனர். இவர்களது முக்கியக் கோரிக்கையாக இருப்பது நீர்வரத்து அதிகமுள்ள காலங்களில் ஊட்டமலை பரிசல்துறை, மாமரத்துக்கடவு பரிசல் துறை மற்றும் கோத்திகல் பரிசல்துறை ஆகிய 3 துறைகளிலும் பரிசல் விட அரசு அனுமதி தரவேண்டும் என்பதே. 
 இந்த கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் திருவிழாவையொட்டி  ஆண்டுதோறும் பரிசல் போட்டிகள் நடத்துவதை இவர்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.  போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகின்றன. இந்தப் போட்டியைக் காண சுற்றுவட்டார  மக்கள் திரளாக வந்து கண்டு களிக்கின்றனர். 

தாமஸ் மன்றோ குளம்



தாமஸ் மன்றோ தர்மபுரியில் துணை ஆட்சியராக இருந்தபோது ஒரு குளம் வெட்டினார். இதற்கு மன்றோ சாஹிப் குளம் என்று பெயரிட்டு பொதுமக்கள் அழைத்தனர். மன்றோ சாப்பு குளம் என்று  வழக்கில் உள்ள இந்த குளத்தின் அருகில் அவ்வாறே அவர் உண்டாக்கிய தோட்டம் மன்றோ சாப்புத் தோட்டம் என்று வழங்கப்பட்டது.... சோழர் காலக் கல்வெட்டு இங்குள்ள படித்துறையில் இருப்பதால் இவர் இந்த குளத்தை புதுப்பித்திருக்கலாம்.

 (ஆதாரம்: தருமபுரி வரலாறும் பிரகலாத சரித்திரமும் – ச.கிருஷ்ணமூர்த்தி. பக்: 38-39).

தாமஸ் மன்றோ இறந்தவுடன் அவரது மனைவி வில் ஹெல்மினா தருமபுரியில் நினைவிடத்தை அமைத்துள்ளார். அந்த இடத்தில்தான் இப்போது தாமஸ் மன்றோ நினைவுத் தூண் உள்ளது.  இன்று அந்த தோட்டம் மறைந்து குளத்தின் பெயரும் "கான் சாகிப் குளம்" என்று மாறி தற்போது வழக்கத்தில் உள்ளது. இந்த குளம் தருமபுரி - திருப்பத்தூர்   மாநில நெடுஞ்சாலையில்  தருமபுரி நகரில் வேல் பால் டிப்போ அருகில் அமைந்துள்ளது. 


மாவட்ட மைய நூலகம், தருமபுரி




  12-01-1955 அன்று தருமபுரி நகராட்சியில் முதல் கிளை நூலகமாக துவங்கப்பட்டது.  பின்னர் மாவட்ட மைய நூலகமாக 01-01-1975 முதல் சொந்த கட்டடத்தில் தருமபுரி நகரில் நெசவாளர் காலனியில் இயங்கி வருகிறது. இந்த நூலகம் தமிழ்நாடு அரசால் நிர்வகிக்கப்படும் பொது நூலகத் துறையின் கீழ் மாவட்ட நூலக ஆணைக்குழுவினரால் செயல்பட்டு வருகிறது.  மாவட்டத்தில் மொத்தம் 116 நூலகங்கள் இயங்கி வருகிறது. அவற்றில் 1 மாவட்ட மைய நூலகம், 33 கிளை நூலகங்கள், 69 ஊர்ப்புற நூலகங்கள், 26  பகுதி நேர நூலகங்கள் என விரிவடைந்துள்ளது. 
மாவட்டத்தின் கிளை நூலகங்கள்- 33 அவைகள்: 

  1. அரூர் 
  2. பென்னாகரம் 
  3. காரிமங்கலம் 
  4. பாப்பிரெட்டிப்பட்டி மஜீத் தெரு 
  5. கடத்தூர் 
  6. பாலக்கோடு 
  7. பாப்பரப்பட்டி 
  8. பி. மல்லாபுரம் 
  9. அத்தியமான்கோட்டை 
  10. ராமியனஹள்ளி 
  11. லளிகம் 
  12. கம்பைநல்லூர் 
  13. மாரண்டஹள்ளி 
  14. ஏ.மல்லாபுரம் 
  15. ஜக்கசமுத்திரம் 
  16. பெரும்பாலை 
  17. சிந்தல்பாடி 
  18. மெனசி 
  19. தென்கரைக்கோட்டை 
  20. மோளையானூர் 
  21. இண்டூர் 
  22. பாளையம்புதூர்  
  23. இலக்கியம்பட்டி 
  24. மொரப்பூர் 
  25. ஹச். புதுப்பட்டி 
  26. மாட்லாம்பட்டி 
  27. கூத்தப்பாடி 
  28. பெள்ளார ஹள்ளி 
  29. கடகத்தூர் 
  30. ஏ.ஜெட்டி ஹள்ளி 
  31. பொய்யப்பட்டி 
  32. வாத்திமாரத்த ஹள்ளி 
  33. பைரநத்தம் 

ஊரக நூலகங்கள்: 69

  1. நல்லம்பள்ளி 
  2. அதிகாரப்பட்டி 
  3. வெண்காட்டாம்பட்டி 
  4. ஏலகிரி 
  5. இருமத்தூர் 
  6. மோட்டங்குறிச்சி 
  7. சின்னான்குப்பம் 
  8. நெருப்பூர் 
  9. வி. முத்தம்பட்டி 
  10. மருதிப்பட்டி 
  11. மூக்கனூர் 
  12. சாமிசெட்டிப்பட்டி 
  13. மோபிரிப்பட்டி 
  14. தொட்டபாவஹள்ளி 
  15. பஞ்சப்பள்ளி 
  16. ஏ. பள்ளிப்பட்டி 
  17. பூதநத்தம் 
  18. ஆர்.கோபிநாதம்பட்டி 
  19. மருக்காலாம்பட்டி 
  20. பெரியாம்பட்டி 
  21. நல்லகுட்டலஹள்ளி 
  22. மல்லுப்பட்டி 
  23. சீரிநாயக்கன ஹள்ளி 
  24. கிருஷ்ணாபுரம் 
  25. நாயக்கன்கொட்டாய் 
  26. கடைமடை 
  27. சாலைக்குள்ளதிராம்பட்டி 
  28. சின்னாம்பள்ளி 
  29. பள்ளிப்பட்டி 
  30. வட்டகானம்பட்டி 
  31. வாழைத்தோட்டம் 
  32. குட்டூர் 
  33. தா.அய்யம்பட்டி 
  34. நத்தமேடு 
  35. ஒபிளி நாய்க்கனஹள்ளி 
  36. சில்லாரஹள்ளி 
  37. காட்டரசம்பட்டி 
  38. கோபிநாதம்பட்டி கூட்டுரோடு 
  39. எட்டியாம்பட்டி 
  40. ஒடசல்பட்டி 
  41. கெத்துரெட்டிப்பட்டி 
  42. நவலை 
  43. எஸ்.பட்டி 
  44. வகுத்துப்பட்டி 
  45. எம்.பள்ளிப்பட்டி 
  46. ஹச்.தொட்டம்பட்டி 
  47. நாசன்கொட்டாய் 
  48. பெத்தூர் 
  49. வாச்சாத்தி 
  50. பி.தாதம்பட்டி 
  51. சாமனூர் 
  52. பந்தஹள்ளி 
  53. ஆர்.புதுப்பட்டி 
  54. அரூர் அம்பேத்கார் நகர் 
  55. வேப்பிலைப்பட்டி 
  56. மணியம்பாடி 
  57. மடம் 
  58. கே.அக்ராஹாரம் 
  59. தம்மணம்பட்டி 
  60. பாளையத்தானூர் 
  61. தாள நத்தம் 
  62. பிக்கம்பட்டி 
  63.  வெங்கடசமுத்திரம் 
  64. கன்னிப்பட்டி 
  65. ஈச்சம்பட்டி 
  66. பூசெட்டிஹள்ளி 
  67. பரிகம் 
  68. ஜடையம்பட்டி 
  69. மோதூர் 

பகுதி நேர நூலகங்கள்:

  1. ஏலகிரியான்கொட்டாய் 
  2. சாமாண்டஹள்ளி 
  3. சிட்டிலிங் 
  4. வேலானூர் 
  5. ரெட்டைகுட்டை 
  6. நடுவளவு 
  7. நவலை (சமத்துவபுரம்)
  8. ஜிட்டாண்டஹள்ளி 
  9. வத்தப்பட்டி 
  10. வேப்பனத்தம் 
  11. அலமேலுபுரம் 
  12. தாதனூர்புதூர் 
  13. குருபரஹள்ளி 
  14. தொங்கனூர் 
  15. ரேகடஹள்ளி 
  16. கொண்டகரஹள்ளி 
  17. ஈட்டியாம்பட்டி 
  18. பவலாந்தூர் 
  19. முக்கல்நாயக்கன்பட்டி 
  20. வத்தல்மலை 
  21. காடுஹள்ளி 
  22. குடுமியான்பட்டி 
  23. பெரியாம்பட்டி (சமத்துவபுரம்)
  24. பத்தரஹள்ளி 
  25. அனுமந்தாபுரம் 
  26. த. துறிஞ்சிப்பட்டி 










தென்கரைக்கோட்டை

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி வட்டத்தில் உள்ளது, தென்கரைக்கோட்டை. இந்த ஊர்.   தென்கரைக்கோட்டை, தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி வட்டம்,  மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூராட்சியாகும். பாப்பிரெட்டிப்பட்டியிலிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவிலும் தருமபுரியில் இருந்து தென் கிழக்கே கடத்தூர் வழியாக 35 கி.மீ. தொலைவிலும் உள்ளது இந்த இங்குள்ள கோட்டைக்கு அருகில் ஜலகண்டீஸ்வரர் ஆறு உள்ளது. இவ்வாற்றிற்குத் தெற்கே கோட்டை அமைந்துள்ளதால் இது தென்கரைக்கோட்டை என்று அழைக்கப்படுகிறது. வடக்கே வடகரை எனும் ஊரும் உள்ளது. கி.பி. 1652 ஆம் ஆண்டு வரை பீஜப்பூர் சுல்தான்களின் வசம் இருந்த இக்கோட்டையை கண்டீவர நரசராச உடையார் என்பவரால் கைப்பற்றப்பட்டது. 12-2-1768 - இல் ஐதர் அலியின் கைக்கு வந்தது. அதே ஆண்டில் கர்னல் உட் என்பவர் கைக்குக் கிடைத்த முதல் கோட்டை தென்கரைகோட்டையே.  
 திப்பு சுல்தான், தாமஸ் மன்றோ காலத்தில் கூட இந்த தென்கரைக்கோட்டை முக்கிய நகரமாகத் திகழ்ந்தது. பழைய ஆவணங்களில் தென்கரைக் கோட்டை தாலுகா என்றே இருப்பதைக் காணமுடிகிறது. 1821 ஆம் ஆண்டு தென்கரைக்கோட்டை தனது தாலுகா என்னும் தகுதியை  இழந்தது. 
2009 ஆம் ஆண்டு முதல் இது தனி கிராம பஞ்சாயத்தாக உள்ளது. இந்த ஊராட்சியின் மொத்த பரப்பளவு 1314.61 ஹெக்டேராகும். இந்த பஞ்சாயத்திற்கு உட்பட்ட மொத்த குக்கிராமங்கள் 23. இது பாப்பிரெட்டிபட்டி வட்டத்திற்கு உட்பட்ட வருவாய்பிர்க்காகளில் ஒன்றாக விளங்கிவருகிறது. தென்கரைக்கோட்டை வருவாய் பிர்க்காக்களில் 34 வருவாய் கிராமங்கள் உள்ளன. 

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த ஊராட்சியில் மொத்த குடியிருப்புகள் 1079. மொத்த மக்கள்தொகை 5142. இதில் ஆண்கள் 2603 பெண்கள் 2539.






தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை - கி.பி. 148-165

        தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர வேந்தர்களின் மரபில் வந்தவன். இவனது தந்தையான செல்வக் கடுங்கோ ஆழியாதன் இரும்பொறைக்குப் பின் சேர நாட்டின் அரசன் ஆனான். இவன் ஆழியாதனுக்கும், அவனது அரசியான பதுமன் தேவிக்கும் பிறந்தவன். சங்கத் தமிழ் இலக்கியமான பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்து இவன் மீது பாடப்பட்டது. அரிசில்கிழார் என்னும் புலவர்  இதனைப் பாடியுள்ளார்.
        தகடூர் மீது படையெடுத்து அதன் மன்னன் அதியமானை வென்றதன் மூலம் இவனுக்குத் தகடூர் எறிந்த என்னும் சிறப்புப் பெயர் விளங்கியது. இதனையொட்டியே தகடூர் யாத்திரை என்னும் தனி நூலும் எழுந்தது. களைப்பு மிகுதியால் முரசு கட்டிலில் ஏறித் துயில் கொண்டுவிட்ட மோசி கீரனார் என்னும் புலவர் துயில் கலையும் வரை கவரி வீசினான் இவன் என்று புகழப்படுகிறான். கருவூரைச் சேர நாட்டின் தலைநகர் ஆக்கியவன் இவன் என்றும் கருதப்படுகிறது.  

புரவடை


             சிதைந்து போன அதியமான்கோட்டைக்கு தென்புறத்தில் உள்ள ஒரு ஊரின் பெயர் "புரவடை".  புரவி என்றால் குதிரை என்று பொருள்.  புரவிகளை அடைத்து வைத்துள்ள இடம்  அல்லது புரந்த இடமாக இது இருக்க  வேண்டும் என்று கருதத் தோன்றுகிறது. புரவி + அடை என்பதே "புரவடை" ஆகியிருக்கலாம். 



ஆதாரம்: சில வரலாற்றுச் சிதைவுகள் இரா.துரைசாமி, அரும்பொருட்காட்சியக திறப்புவிழா மலர் - தருமபுரி மாவட்டம், தருமபுரி மாவட்ட வரலாற்றுப் பேரவை வெளியீடு -1979 (பக்: 31-33) )

பதிகால் பள்ளம்


      தருமபுரிக்கு மிக அருகாமையில் இன்றைய மாவட்ட ஆட்சித்தலைவர் இருப்பிடத்திற்கு மிக அருகில் உள்ள ஓர் இடம் "பதிகால் பள்ளம்" என்று அழைக்கப்படும் இடத்திற்கு "குதிரைக்கொல்லை"  என்று பழங்காலத்தில் பெயர். இன்றும் தருமபுரி குமரசாமிபேட்டை மக்கள்  இப்பகுதியை குதிரைக்கொல்லை என்றே அழைக்கின்றனர்.   அதியர்கள் குதிரைமலைக்குத் தலைவர்கள்.  குதிரைகள் நிறைய வளர்த்து வந்துள்ளனர் என சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இவ்விடங்கள் குதிரைகள் மேயும் இடமாக இருந்திருத்தல் வேண்டும்.  இன்றைய மூக்கனூர்மலை அன்றைய குதிரை மலையாக இருக்கலாம் என்று ஆய்வார்கள் கருதுகின்றனர். 


ஆதாரம்: சில வரலாற்றுச் சிதைவுகள் இரா.துரைசாமி, அரும்பொருட்காட்சியக திறப்புவிழா மலர் - தருமபுரி மாவட்டம், தருமபுரி மாவட்ட வரலாற்றுப் பேரவை வெளியீடு -1979 (பக்: 31-33) )

பென்னாகரம்


            "பெண்" என்றால் தெலுங்கு மொழியில் "பெரிய" என்று பொருள்.  நகரம் இத்துடன் சேர்ந்து பெண்ணாகரம்  ஆகி நாளடைவில் மறுவி "பென்னாகரம்" ஆயிற்று.  இங்குள்ள பிராமணர் தெருவில் உள்ள சிவன் கோவிலுக்கு "கோட்டை சிவன் கோவில்" என்று பெயர்.  சுமார் 120 ஆண்டுகளுக்கு முன் கோட்டையில் இருந்த சிவன் கோவிலைப் பிரித்து வந்து இங்கு கட்டியுள்ளனர். இக்கோட்டை இன்று சிதிலமடைந்து விளைநிலங்களாக மாறிவிட்டன.  இங்குள்ள ஆங்கிலேய தளபதியின் சமாதியும் கொடிமேடைகளும் இன்றும் பார்க்கக் கூடியதாக உள்ளன. பல அரசர்களின் கையில் இந்த கோட்டை இருந்து வந்துள்ளது.  இறுதியாக இந்தக் கோட்டையை திப்பு சுல்தானிடம் இருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர்.  சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்கு ஒரு படைப்பிரிவு இருந்துள்ளது.  பின்னர் அந்தப் படைப்பிரிவு கலைக்கப்பட்டுவிட்டது.


ஆதாரம்: சில வரலாற்றுச் சிதைவுகள் – இரா.துரைசாமி,  அரும்பொருட்காட்சியக திறப்புவிழா மலர் -  தருமபுரி மாவட்டம், தருமபுரி மாவட்ட வரலாற்றுப் பேரவை வெளியீடு -1979   (பக்: 31-33)

பாளையம்புதூர்

                  நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட  ஒரு ஊராட்சியின் பெயர் பாளையம்புதூர் ஆகும். வரலாற்றில் இங்கு எப்போதும் ஒரு படைப்பிரிவு இருந்து வந்துள்ளது. எனவே இந்த ஊருக்குப் பாளையம் என்று பெயர் வந்துள்ளது.  இன்றுள்ள இந்த ஊர் புதிதாக உருவானதால் பாளையம்புதூர் என்று வழக்கத்தில் வந்தது.  தொப்பூர் கணவாய் வழியாக  தகடூர் நாட்டிற்குள் நுழையும் எதிரிப்படைகளை தடுத்து நிறுத்துவதற்காகவே இப்படைப் பிரிவு இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்விடத்தைச் சுற்றி பல போர்கள் நடந்திருக்கின்றன.  பல நடு கற்களும் வீர கற்களும் இதற்கு சான்றாக உள்ளன.  
             "தண்டு" என்றால் " படை". இப்படையில் பணியாற்றிய ஒருவன் பெயரால் உருவான ஊரே "தண்டுகாரன்பட்டி" என்பதாகும். பாளையத்திற்கு மிக அருகில் இந்த ஊர் இருப்பதை இங்குப் பொருத்திப் பார்க்கவேண்டும். 

ஆதாரம்: சில வரலாற்றுச் சிதைவுகள் – இரா.துரைசாமி, அரும்பொருட்காட்சியக திறப்புவிழா மலர் - தருமபுரி மாவட்டம், தருமபுரி மாவட்ட வரலாற்றுப் பேரவை வெளியீடு -1979 (பக்: 31-33) )
 


  

குண்செட்டி குளம்


     தருமபுரி நகராட்சிகுட்பட்ட 26 வது வார்டில் சாலை விநாயகர் தெரு, மிட்டாரெட்டிஹள்ளி சாலை, ராஜ மிசின் சாலை, குன்னன்குளம் தெரு, மாணிக்கம் தெரு, குருவன் தெரு, கொள்ளஹள்ளி சாலை,  சுண்ணாம்பு சூலை தெரு, பெருமாள் தெரு, சோழன் தெரு, அண்ணாசாமி தெரு, கோதண்டன் தெரு  முதலான தெருக்கள் உள்ளன. இங்கு மாரியம்மன் கோவில், சாலை விநாயகர் கோவில், ஆஞ்சநேயர் கோவில், முருகன் கோவில், சாய்பாபா, நாகம்மன் கோவில் என பல கோவில்கள் உள்ளன. இதில் முருகன் கோவில் அருகில் உள்ளது குண்செட்டிக் குளம். இந்த குளத்தைச் சுற்றி நான்கு புறமும் படிகட்டுகள் உள்ளன. ஆனால் அந்த படிக்கட்டு
களை மறைத்து நான்குபுறமும் வீடுகள் உருவாகி குளத்தை மறைத்துவிட்டன. இது கடந்த முப்பது ஆண்டுகளில் நடந்துள்ளது. குளத்திற்கு வரும் நீர் வழிகளும் மறைந்து சிமென்ட் சாலைகளாகி விட்டன. இதனால் குளம் ஆக்கிரமிக்கப்பட்டதோடு, குளத்திற்குள்ளும் எண்ணற்ற செடிகொடிகள், மரங்கள் வளர்ந்து குளத்தை மூடிக்கொண்டிருக்கின்றன. குளத்தைச் சுற்றியுள்ள வீடுகளின் கழிவு நீர் மற்றும் குப்பைகளால் குளம் மாசடைந்து இருக்கிறது.  இதனால் விசப் பூச்சி மற்றும் கொசுத் தொல்லைகளும் தொற்று நோய் பரவக்கூடிய வாய்ப்பும் உள்ளது.  ஒரு காலத்தில் இந்த குளத்தில் இருந்து நீர் எடுத்து வந்து கோவில்களில் சுவாமி சிலைகளுக்கு அபிஷேகம் செய்து பின் பூசைகள் நடக்கும் என்றும் இப்பகுதி மக்கள் இந்த குளத்தில் நீராடிய பின் கோவிலில் வழிபட்டு செல்வார்கள் என்றும் சிறுவர்கள் இக்குளத்தில் நீச்சலடித்து விளையாடுவார்கள் என்றும் ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு முன் இந்தக் குளம் தூர் வாரப்பட்டதாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். சாலை விநாயகர் கோவிலுக்குச் சொந்தமான இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளம் காலப்போக்கில் மறைந்தே போகும் சூழ்நிலையில் உள்ளது. 
     நீர் நிலைகளைப் பாதுகாக்கும் வகையில் இக்குளத்தைச் சுற்றியுள்ள ஆக்ரமிப்புகளை அகற்றி மாசடைந்த இந்த குளத்தை தூர்வாருவதுடன் வேலி அமைத்துப் பாதுகாத்து பயன்பாட்டிற்குக் கொண்டுவர உடனடியாக நகராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் இந்து அறநிலையத்துறையும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

புதன், 21 நவம்பர், 2018

தருமபுரி மாவட்டம் பற்றிய நூல்கள்,ஆய்வேடுகள் மற்றும் ஆய்வுக்கட்டுரைகள் (தொடர்ச்சி)

Evaluating Fluoride Contamination In Ground Water Samples of Dharmapuri District, Tamil Nadu, India. Thirupathi S and Muniyan M International Journal of Recent Scientific Research, .2018, 9(1), pp. 23306-23314 


First outbreak of Japanese encephalitis in two villages of Dharmapuri district in Tamil NaduVictor TJ Malathi M Ravi V ,   Palani G ,    Appavoo NC     The Indian Journal of Medical Research 
Frequency analysis of rainfall deviation in Dharmapuri district in Tamil Nadu -
Rajendran, V.  Venkatasubramani, R. Indian Journal of Geo Marine Sciences, Vol. 46 No:08 August 2017. Pp: 1710-1714

Ethno-Medico Botany of Malayali Tribes in Sittilingi Hills, Harur Taluk, Dharmapuri District, Tamil Nadu -  K. Ravikumar, A. C. Tangavelou, N. Dhatchanamoorthy and Syed Noorunnisa Begum, My Forest – March 2018 Vol. 54 (Issue 1), Page 15-28

Ethnomedicinal Plants Used as Medicine by the Kurumba Tribals in Pennagaram Region, Dharmapuri District of Tamil Nadu, India. Alagesaboopathi, C. Asian Journal of Experimental Biological Science, (2011) Vol. 1Pp:140–142.

Medicinal Plants Used by Tribal and non-Tribal People of Dharmapuri District, Tamil Nadu, India. Alagesaboopathi, C. International Journal of Current Research in Bioscience and Plant Biology (2014), Vol. 1: Pp: 64–73.

Ethnopharmacological studies on the Medicinal Plants used by Tribal Inhabitants of Kottur Hills, Dharmapuri, Tamilnadu, India. Sivaperumal.R, Ramya.S,Veera Ravi.A. Rajasekaran.C. and Jayakumararaj.R, Environment and We: International Journal of Science and Technology, 2010, Vol. 5: Pp: 57–64.

Prevalence of Dental Fluorosis And Its Association With Fluoride Content of Drinking Water in the Rural Area Of Dharmapuri District, Tamilnadu. Snerghalatha Duraiswami, Vidya Albert Yen, Journal of Evolution of Medical and Dental Sciences, September, 2017 Volume: 6 Issue: 76 Pp: 5457-5462

Appraisal of water quality index for drinking purpose of groundwater in Pennagaram Block, Dharmapuri District, Tamilnadu, India, K. Vijai    Khan S.M. Mazhar Nazeeb    A. Ravikumar, International Research Journal of Earth Sciences May, 25, 2017, Vol. 5, Issue (4), 
Pp:  8-15

Evaluation of groundwater quality and water quality index in the Palacode and Pennagaram Taluks, Dharmapuri district, Tamil Nadu, India, R Selvaganapathi, S Vasudevan, P Balamurugan, CV Nishikanth, G Gnanachandrasamy and G Sathiyamoorthy, International Journal of Applied Research, 2017,  Vol: 3, Issue:6, Part-E  Pp: 285- 290

Mapping of Spatio-temporal distribution of Mosquito vector density in Sitheri Hills using GIS Technology,  P. Suganthi1 , M. Govindaraju1 , B. Sarojini Devi1 , Rajiv Das Kangabam1 , K. Suganthi1 , V. Thenmozhi and B.K. Tyagi, International Journal of Advanced Remote Sensing and  GIS 2015, Volume 4, Issue 1, Pp: 873- 882.

Customers’ satisfaction towards Reliance Jio Sim with special reference to Dharmapuri District, Boobalan and K. Jayaraman, Periyar University, Salem, Journal on Management Studies, August 2017, Vol.03, Issue: 03 Pp:
Newborn care practices in a tribal community in Tamilnadu: A qualitative study, Latha S., Kamala S., Srikanth S. International Journal of Contemporary Pediatrics,  May 2017; Vol 4, No 3 Pp: 869-874

Child Right Awareness-Need of the Day, Dr. M. E. S. Elizabeth, Asadi Asha Jyothi, (2016) International Education and Research Journal, Vol. 2, No. 4 Pp: 51-52

Ethnobotany of Dharmapuri and North Arcot Districts in Tamil Nadu, South India, T. Ravishankar, 12 Dec 2007, Journal Biodiversity, Vol.8 Issue: 1, Pp: 12-20

Megalithic Monuments in Dharmapuri District, C. Murugesan Government Arts College, Dharmapuri, international Journal of Multidisciplinary Research and Modern Education,  2017, Vol. 3, Issue:2, Pp:

DMC (Designated Microscopic Centers) Enhanced with Light Emitting Diode (LED) Back up from RNTCP Cell – A Pilot Study Conducted in Dharmapuri District of Tamil Nadu, India, T. Sabeetha, Gowri Veligandla and Stalin, Department of Microbiology, Govt. Dharmapuri Medical College, Dharmapuri, International Journal of Current Microbiology and Applied Sciences, 2016, Vol:5, Issue: 12 Pp: 772-776

Analysis of fluoride level in groundwater and fluorosis survey among school children in Pennagaram block, Dharmapuri district, TN, K. Vijai, S. M. Mazhar Nazeeb Khan Jamal Mohamed College, Trichy, Tamilnadu, International Journal of Sciences & Applied Research 2017 Vol:4 Issue: 3, Pp: 85-90

Identification of Fluoride contaminations with the interaction of physico-chemical characteristic in Groundwater of Dharmapuri District, Tamil Nadu, Sendesh Kannan, K. 2011, Ind. Arch. Appl. Sci. Res. Vol:3 No:4 Pp: 336-351
                                                                                                 
Dengue fever outbreaks in two villages of Dharmapuri district in Tamil Nadu, Victor, T John; Malathi, M; Gurusamy, D; Desai, Anita, Indian Journal of Medical Research, October 1, 2002  

Hypsometric Analysis of Varattaru River Basin of Harur Taluk, Dharmapuri Districts, Tamilnadu, India using Geomatics Technology, Sivakumar. V, Biju. C, Benidhar Deshmukh International Journal of Geomatics And Geosciences, 2011,Vol.2, No:1, Pp: 241-247

Occurrence of Bovine Thelaziosis in Dharmapuri District, K.Arunachalam1,V. Meenalochani and M.S. Kannadhasan, TANUVAS, Dhamapuri, Indian Veterinary Journal, December 2017, Vol. 94 (12) : Pp: 84

Motivational Factors Among Tribal Women For Joining Self Help Groups In Dharmapuri District, Dr.S.Balamurugan, S.Tasnim, PRIMS, Periyar University, Salem, International Journal of Research in Social Sciences September 2018, Vol. 8 Issue 9, Pp: 688 – 696.

A Study on Self-Help Groups in Dharmapuri District.  Kasturi.R International Journal of Science, Technology and Humanities (2014), Vol: 1 Pp: 44-49

SHGs: A tool for Empowering Women. A case study in Dharmapuri, Rathidevi.R,
Women Empowerment Issues and Challenges, Regal Publications, New Delhi, 2012 


(தொடரும்)