சனி, 17 செப்டம்பர், 2016

வத்தல்மலை

 வத்தல்மலை

      தருமபுரியிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும் கடல் மட்டத்திலிருந்து 3600 மீட்டர் உயரத்திலும் உள்ளது வத்தல்மலை.
     சேர்வராயன் மலைத்தொடரின் ஒரு பகுதியாக இருக்கும்  பரப்பளவு சுமார் 225 சதுர கி.மீட்டர் ஆகும். இந்த மலைக்காடுகளில் உள்ளூர் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள், காடுகள் அழிக்கப்பட்டு விளைநிலங்களாக மாற்றம்பெற்று வருவதால் அழித்துக்கொண்டு வருகின்றன. அழிவுநிலைக்குத் தள்ளப்பட்ட மற்றும் அழிவு நிலையிலுள்ள விலங்கினங்களான காட்டெருதுகள், காட்டுப்பன்றிகள், நீலகிரி லங்கூர்,  சாம்பார் இன ஆடுகள், 12  ஒருமுறைப் பூக்கும் குறிஞ்சிமலர் வகைகளும்  எண்ணற்ற மூலிகை தாவரங்களும் இன்றும் இந்த மலைப் பகுதிகளில் இருக்கின்றன.
  தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி ஊராட்சிக்குட்பட்ட கொண்டஹரஹள்ளி ஊராட்சியிலுள்ள பெரியூர், மன்னாங்குழி, சின்னான்காடு, குழியனூர், நாயக்கனூர், ஒன்றியங்காடு, கருங்கல்லூர், கொட்டலங்காடு உள்ளிட்ட 8 கிராமங்களும் மொரப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட சுங்கரஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட பால்சிலம்பு கிராமத்தையும் சேர்த்து 9 மலைக்கிராமங்களைக் கொண்டது இந்த வத்தல்மலை. இந்த மலைக்கிராமங்களில் வரையறுக்கப்பட்ட பழங்குடி இனத்தைச் சார்ந்த சுமார் 498 மலையழிக்குடும்பங்கள் வசித்து வருகின்றன. மக்கள்தொகை சுமார் 5200 பேர். 
  வத்தல்மலையில் ஒரு ஊராட்சி ஒன்றிய  துவக்கப்பள்ளியும், ஒரு நடுநிலைப் பள்ளியும், ஒரு அங்கன் வாடி மையமும் உள்ளது. 3 மேல்நிலைத்  நீர்தேக்கத்  தொட்டிகள்  மூலம் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஒரு பகுதி நேர நியாயவிலைக் கடையும்,ஒரு கிளை அஞ்சல் நிலையமும்  வருகிறது. வனத்துறை மூலமாக ஆறுக்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.  மூலமாக மழைக்காலங்களில் காட்டாற்றில்       
வரும் மழைநீரைத் தேக்கிவைத்து விவசாயத்திற்குப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.  
  இங்கு காபி,மிளகு, ஆரஞ்சு,சப்போட்டா,எலுமிச்சை,ரோஜா, செண்டுமல்லி, செவ்வந்திப்பூ,  சில்வர்ஓக் முதலானவைகளுடன் மரவள்ளிக்கிழங்கு முக்கியப்  பயிராக பயிரிடப்பட்டுவருகிறது. மேலும் சிறுதானியங்களான சாமை, தினை, கேழ்வரகு போன்றவைகளும் பயிரிடப்பட்டு வருகின்றன.
    சாலை வசதியின்றி இம்மலை மக்கள் தங்கள் விளைப் பொருட்களைத் தலைசுமையாக அடிவாரம் கொண்டுவந்து விற்பனை செய்து வந்தனர். வத்தல்மலைக்கு சாலை வசதி வேண்டும் என்பது இவர்களது நீண்டநாள்  இருந்து வந்தது. 
    2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற  கூட்டத்தில் வத்தல்மலையை சுற்றுலாத் தலமாக தமிழக முதலமைச்சர் அறிவித்தார்.
   தேவையான அடிப்படை வசதிகளுடன், ஏரி  படகு சவாரி,  பார்வைகோபுரம் மற்றும் இதர பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய 50 ஏக்கர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா ஒன்றும்  அமைக்கப்படவுள்ளது.  தொடர்ந்து  சீரமைக்கும் பணிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டது.  வத்தல்மலையிலிருந்து பெரியூர் வரை 16 கி.மீட்டர் தூரத்திற்கு 23 கொண்டைஊசி வளைவுகளுடன்  தார்சாலை   அமைக்கும் பணி நிறைவுற்று  போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. 
  இந்த  மலையை அடைய தருமபுரியிலிருந்து சமவெளியில் 17 கி.மீ.   பயணித்து பின் மலைப்பகுதியில் 8 கி.மீ. செல்லவேண்டும். 

1 கருத்து:

  1. வத்தல் மலை தகவல்கள் அருமை........ விரைவில் சுற்றுலா தளமான மாறும்.........

    பதிலளிநீக்கு