வெள்ளி, 4 நவம்பர், 2016

தருமபுரி – சில புள்ளி விவரங்கள்


தருமபுரி – சில புள்ளி விவரங்கள்:


  • தருமபுரி மாவட்டம் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி சில புள்ளி விவரங்கள்:
  • தமிழ் நாட்டில் மக்கள் தொகையில் தருமபுரி மாவட்டம் இருபத்துநான்காவது இடத்தில் உள்ளது. 
  • தருமபுரி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் 17.3 % பேர் நகர்ப்புறத்தில் வசிக்கின்றனர்.
  • தருமபுரி மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி, ஒரு சதுர கிலோமீட்டருக்கு 335 பேர்.
  • ஆயிரம் ஆண்களுக்கு 946 பெண்கள் என ஆண்:பெண் விகிதாச்சாரம் உள்ளது 
  • தாழ்த்தப்பட்ட வகுப்பினரில் ஆண்:பெண் விகிதாச்சாரம் ஆயிரம் ஆண்களுக்கு 968 பெண்களே உள்ளனர். 
  • தமிழ் நாட்டின் மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் கல்விநிலையில் பின் தங்கியே உள்ளது. (68.5%). 
  • கடந்த 2001-2011 ஆம் ஆண்டைக் காட்டிலும் பிறப்பு விகிதம் 16.3%. கூடியுள்ளது.
  • தருமபுரி மாவட்டத்தில், அரூர் வட்டம் 166 குடியிருப்பு கிராமங்களைக் கொண்டு முதலிடத்திலும், தருமபுரி வட்டம் 59 குடியிருப்பு கிராமங்களைக் கொண்டு கடைசி இடத்திலும் உள்ளது. 
  • தருமபுரி வட்டத்தில் உள்ள மானியாதஹள்ளி கிராமம் அதிக மக்கள் தொகை கொண்ட கிராமமாகவும் (3157), அரூர் வட்டத்தில் உள்ள செட்டிகுட்டை கிராமம் மிகக் குறைந்த அளவு மக்கள்தொகைக் கொண்ட  கிராமமாகவும் (59)  இருக்கிறது.
  • வேலைக்குச் செல்லும் பெண்கள் விகித (41.7 %) அடிப்படையில் மாநிலத்திலேயே மூன்றாவது இடத்தில் உள்ளது. 
  • கழிப்பறை இல்லாத வீடுகளின் அளவு (89.3%) மாநிலத்திலேயே அதிகமுள்ள மாவட்டமாகத் திகழ்கிறது.

ஆதாரம்: 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கையேடு, தருமபுரி
(முதன்மை கணக்கெடுப்பு சுருக்கம்)
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக