புதன், 9 நவம்பர், 2016

தியாகி ஏ. பஞ்சாட்சரம்


தியாகி ஏ. பஞ்சாட்சரம்:

 
       தருமபுரி மாவட்டம், பாப்பரப்பட்டியைச் சேர்ந்தவர் சுதந்திரப் போராட்ட தியாகி பஞ்சாட்சரம் அவர்கள். இவரது இளவயதில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த இவர், திரு. சுப்ரமணிய சிவாவுடன் நெருங்கிய நட்புடன் இருந்து அவருடன் சுதந்திரப் போராட்ட களத்தில் இறங்கிப் பணியாற்றிவந்தார். 1936 ஆம் ஆண்டு நிலபிரபுக்களிடையே ஏற்பட்ட கருத்துமோதலால் காங்கிரசில் இருந்து வெளியேறினார். 1937-ஆம் ஆண்டு சுப்ரமணிய சிவா வாசகர் சாலை என்ற அமைப்பை பாப்பாரப்பட்டியில் உருவாக்கினார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிரம் காட்டிய இவர், அலிப்புரம் சிறையில், சிறைவாசம் அனுபவித்தார். 1940-ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து தொடர்ந்து அக்கட்சியிலேயே இருந்து பணியாற்றிவந்தார். விடுதலைக்குப் பின்பும் கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றுள்ளார். ஒன்றுபட்ட சேலம் மாவட்டக் குழு உறுப்பினராக பணியாற்றியுள்ளார். நிலமீட்புப் போராட்டங்கள் நடத்தி ஏழை மக்களுக்கு நிலங்கள் கிடைக்கச் செய்தவர். 
 திரு ஜீவா, பேராசிரியர் சாமுவேல், டாக்டர் அன்னாஜி போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றியவர். 
   தனது இறுதி காலகாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.   
      பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டம் உள்ள பகுதியில் ஆக்ரமிப்புக்களை அகற்றி வேலி அமைக்க வேண்டும்' என்றும் பாரத மாதா கோயில் கட்ட சிவா வாங்கிய நிலத்தை, அலுவலர்கள் நேர்மையாக அளவீடு செய்து அப்பகுதியை வேலி அமைத்து ஆக்ரமிப்புகளில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றும் அப்பகுதியில் பூங்கா அமைக்கும் பணியின் போது அங்குள்ள மரங்களை வெட்டக்கூடாது என்றும் இவர் அரசுக்குக் கோரிக்கை வைத்திருந்தார்.
இவரது மனைவி திருமதி ராஜம்மாள் (85). இவருக்கு 3 மகன்கள் (ஸ்டாலின், மணி, குருசேவ்), 2 மகள்கள் (சாந்தி, லட்சுமி) ஆகியோர் உள்ளனர்.
தியாகி பஞ்சாட்சரம் அவர்கள் தமது 98-வது வயதில், 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22-ந்தேதி புதன்கிழமையன்று அதிகாலை பாப்பாரப்பட்டியில் இயற்கை எய்தினார்.
அன்னாருக்கு, அரசு சார்பிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், பாப்பாரப்பட்டி தியாகி சுப்ரமணிய சிவா அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி மாணவர்கள் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக