புதன், 13 பிப்ரவரி, 2019

தருமபுரி ஊராட்சி ஒன்றியம்




தருமபுரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களுள் தருமபுரி ஊராட்சி ஒன்றியமும் ஒன்று. இந்த ஊராட்சி ஒன்றியம் சுமார் 270.95 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இதில் கிராமப்பகுதி சுமார் 259.02 ச.கி.மீ. நகர்ப்பகுதி 11.93 ச.கி.மீ. மொத்த குடியிருப்புகள் 44,961. கிராமப்பகுதி 33,537 நகர்ப்பகுதி 11,424.
2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி இந்த ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 181,994. இதில் ஆண்கள் 94,077 பெண்கள் 97,917.
மொத்த மக்கள் தொகையில், அட்டவணை இனத்தவர்கள் 21,008. இதில் ஆண்கள் 10,809 பெண்கள் 10,199. அட்டவணை பழங்குடியினரின் மொத்த மக்கள்தொகை 2,375 இதில் ஆண்கள் 1,241. பெண்கள் 1,134.
மக்கள்தொகை அடர்த்தி ஒரு ச.கி.மீ.க்கு 886.81 பேர் உள்ளனர். ஆண் பெண் விகிதாச்சாரம் 1000 ஆண்களுக்கு 955 பெண்கள் ஆகும். இந்த ஒன்றியத்தில் நகர்ப்புறத்தில் 45 சதவிகிதம் பேரும் கிராமப்புறங்களில் 55 சதவிகிதம் பேரும் உள்ளனர். ஆண்களில் 73 சதவிகிதம் பெண்களில் 60 சதவிகிதம் பேர் எழுத்தறிவு பெற்றவர்களாக உள்ளனர். இதில் அட்டவணை இனத்தவர்கள் 10 சதவிகிதமும் அட்டவணை பழங்குடியினரில் 1 சதவிகிதமும் அடங்குவர்.
தருமபுரி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள கிராம ஊராட்சி மன்றங்கள் 28.
அவைகள்: 1. அதகப்பாடி,2. அ.கொல்ல ஹள்ளி,3. அக்குமனஹள்ளி,4. ஆண்டிஹள்ளி,5. ஹளேதருமபுரி, 6. கடகத்தூர்,7.கே.நடுஹள்ளி,8. கொண்டம்பட்டி, 9. கோடுஹள்ளி 10. கோணங்கிநாய்க்கனஹள்ளி,11. கொண்டகரஹள்ளி,12. கிருஷ்ணாபுரம், 13. .குப்பூர் 14. .இலக்கியம்பட்டி, 15. மூக்கனூர், 16.முக்கல் நாய்க்கன் பட்டி 17. நாய்க்கனஹள்ளி, 18.. நல்லசேன ஹள்ளி, 19. நூலஹள்ளி, ௨௦. புழுதிக்கரை, 21. செம்மாண்டாக் குப்பம், 22. செட்டிக்கரை, 23.சோகத்தூர், 24. திப்பிரெட்டிஹள்ளி, 25. உங்குரானஹள்ளி, 26. வெள்ளாளப்பட்டி 27. வெள்ளோலை 28. வே.முத்தம்பட்டி.
இதில் அடங்கியுள்ள சிற்றூர்களின் எண்ணிக்கை: 403
கல்வி நிலையங்கள்:
ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட
          துவக்கப்பள்ளிகள்    100
         நடுநிலைப்பள்ளிகள்   14
அரசு உயர்நிலைப் பள்ளிகள்      8
அரசு மேனிலைப் பள்ளிகள்      4
தனியார் பள்ளிகள்              22 

நிலப்பயன்பாடு:

காடுகள்       
9978 ஹெக்டேர்
தரிசு நிலமும் விளைச்சலுக்குப் பயன்படாத நிலம்
339 ஹெக்டேர்
வேளாண் தொழில் சாராத பிறவற்றிற்குப் பயன்படும் நிலம்
5433 ஹெக்டேர்
உழுது பயன்படுத்தப்படாத நிலம்
6 ஹெக்டேர்
நிரந்தர மேய்ச்சல் நிலம்
956 ஹெக்டேர்
பல்வேறு மரங்கள் மற்றும் சோலைகள் உள்ள நிலம்
543 ஹெக்டேர்
உழுது பயன்படாத நிலம்
242 ஹெக்டேர்
இதர உழுது பயன்படாத நிலம்
84 ஹெக்டேர்
பயிரிடக்கூடிய மொத்த நிலப்பரப்பு
15580 ஹெக்டேர்
ஆண்டிற்கு ஒருமுறைக்கு மேல் விளைச்சல் காணும் நிலம்
13393 ஹெக்டேர்
நிகர பயிரிடும் பரப்பளவு
28974 ஹெக்டேர்
பதிவேடுகளின்படி மொத்த நிலப்பரப்பு
33163 ஹெக்டேர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக