புதன், 13 பிப்ரவரி, 2019

பென்னாகரம் மற்றும் ஏரியூர் ஊராட்சி ஒன்றியங்கள்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களுள் பென்னாகரம் மற்றும் ஏரியூர் ஊராட்சி ஒன்றியங்களும் அடங்கும்.
இந்த ஊராட்சி ஒன்றியங்கள் மொத்தமாக 646.71 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இந்த ஒன்றியங்கள் இரண்டுமே கிராமப்பகுதியைக் கொண்டதாக உள்ளது. நகர்ப்பகுதி ஏதுமில்லை. மொத்த குடியிருப்புகள் 50132. 
2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி இந்த ஒன்றியங்களின் மொத்த மக்கள் தொகை 205,199 இதில் ஆண்கள் 108,106 பெண்கள் 97,093.
மொத்த மக்கள் தொகையில், அட்டவணை இனத்தவர்கள் மொத்தம் 24,703. இதில் ஆண்கள் 12,972 பெண்கள் 11,771. அட்டவணை பழங்குடியினரின் மொத்த மக்கள்தொகை 4,239 இதில் ஆண்கள் 2231. பெண்கள் 2,038.
மக்கள்தொகை அடர்த்தி ஒரு ச.கி.மீ.க்கு 543.5 பேர் உள்ளனர். ஆண் பெண் விகிதாச்சாரம் 1000 ஆண்களுக்கு 907 பெண்கள் உள்ளனர். ஆண்களில் 71 சதவிகிதம் பெண்களில் 56 சதவிகிதம் பேர் எழுத்தறிவு பெற்றவர்களாக உள்ளனர். இதில் அட்டவணை இனத்தவர்கள் 24 சதவிகிதமும் அட்டவணை பழங்குடியினரில் 22 சதவிகிதமும் அடங்குவர்.
இந்த ஒன்றியங்களில் மொத்தமுள்ள கிராம ஊராட்சி மன்றங்கள் 33.
1.அச்சரஹள்ளி, 2.அஜ்ஜனஹள்ளி, 3. அஞ்சஹள்ளி. 4. அரகாசனஹள்ளி, 5. பந்தர ஹள்ளி, 6. பீலியனூர்,
7. சின்னப்பட்டி, 8. தொன்னகுட்டஹள்ளி, 9. ஜிட்டாண்டஹள்ளி, 10. கிட்டனஹள்ளி, 11. காலப்பம்பட்டி 12. கோடிஹள்ளி 13. கூத்தப்பாடி, 14. குக்குட்டமாரதஹள்ளி, 15. மாதேஹள்ளி . 16. மாங்கரை, 17. மாஞ்சாரஹள்ளி 18. மஞ்சிநாயிக்கனஹள்ளி, 19. நாகமரை 20. ஒண்ணப்பக்கவுண்டன ஹள்ளி, 21. பள்ளிப்பட்டி, 22. பனைக்குளம், 23. பருவதனஹள்ளி, 24. பெரும்பாலை, 25. பிக்கிலி, 26. ராமகொண்டஹள்ளி, 27. சத்தியநாதபுரம், 28. செங்கனூர், 29. சுஞ்சல்நத்தம், 30. தித்தியோபனஹள்ளி, 31. வட்டுவன ஹள்ளி, 32. வேளாம்பாட்டி, 33 .வேப்பிலை ஹள்ளி.
இதில் அடங்கியுள்ள சிற்றூர்களின் எண்ணிக்கை: 426.

நிலப்பயன்பாடு:

காடுகள்       
14586 ஹெக்டேர்
தரிசு நிலமும் விளைச்சலுக்குப் பயன்படாத நிலம்
4861 ஹெக்டேர்
வேளாண் தொழில் சாராத பிறவற்றிற்குப் பயன்படும் நிலம்
10867 ஹெக்டேர்
அஉழுது பயன்படுத்தப்படாத நிலம்
149 ஹெக்டேர்
நிரந்தர மேய்ச்சல் நிலம்
1016 ஹெக்டேர்
பல்வேறு மரங்கள் மற்றும் சோலைகள் உள்ள நிலம்
625 ஹெக்டேர்
உழுது பயன்படாத நிலம்
8971 ஹெக்டேர்
இதர உழுது பயன்படாத நிலம்
307 ஹெக்டேர்
பயிரிடக்கூடிய மொத்த நிலப்பரப்பு
23103 ஹெக்டேர்
ஆண்டிற்கு ஒருமுறைக்கு மேல் விளைச்சல் காணும் நிலம்
6522 ஹெக்டேர்
நிகர பயிரிடும் பரப்பளவு
29625 ஹெக்டேர்
பதிவேடுகளின்படி மொத்த நிலப்பரப்பு
64486 ஹெக்டேர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக