ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

முதுமக்கள் தாழி



இதுவும் இறந்தவர்களுக்கான ஈம நினைவுச் சின்னங்களில் ஒரு வகையாகும். இறந்தவர்களை அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களுக்குப் பிடித்தமானவைகளைஇறந்த உடலுடன் வைத்து ஒரு பெரிய மண்ணாலான தாழியில் வைத்து புதைக்கப்படுவது பண்டைய வழக்கம்.  
தமிழகத்தின், தமிழ் மக்களின் வாழ்க்கை மற்றும் வழிபாடு முறைகளைப் பற்றி நாம் அறிந்துகொள்ள பெரிதும் உதவியாக இருப்பது தொல்லியல் செய்திகளே நமது முன்னோர்கள்,  இறந்தவர்களைப் புதைத்த இடங்களில் பாறைகளாலான கல்பதுக்கைகள்,  கல்திட்டைகள், தொப்பிக்கல், கல்வட்டங்கள், முதுமக்கள் தாழிகள்,  நடுகற்கள் முதலானவைகளை உருவாக்கி அவைகளை வழிபட்டு வந்தனர். இந்தப் பாறைச்சின்னங்கள் நமது வரலாற்றையும் பண்பாட்டையும் நாம் அறிந்துகொள்ள உதவுகின்றன.  இன்று இந்தச் சின்னங்களில் பல குலதெய்வக்கோவில்களாகவும்,   பொது மக்களின் வழிபாட்டுத் தலங்களாகவும் மாறி நமது நாட்டுபுறப் பண்புகளை பறைசாற்றிக் கொண்டிருகின்றன. எண்ணற்ற  இடங்களில் இந்த பழங்காலச் சின்னங்கள் அழிக்கபட்டு விளைநிலங்களாகவும்,  குடியிருப்புகளாகவும் மாறிவிட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக