வியாழன், 29 நவம்பர், 2018

தருமபுரி வனக்கோட்டம்

 
தருமபுரி் வனக்கோட்டம் 1968 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந் தேதியில் அன்றைய விவசாயத்துறையின் அரசு ஆணைப்படி துவங்கப்பட்டது. பின்னர் 20-10-2003 ஆம் அன்று வருவாய்த்துறையின் ஆணைப்படி மறுஉருவாக்கம் செய்து 9-22004 முதல் செயல்பாட்டிற்கு வந்தது. இந்த வனக் கோட்டம் வடக்கே கிருஷ்ணகிரி மாவட்டத்தையும் கிழக்கே திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டத்தையும் தெற்கே சேலம் மாவட்டத்தையும் மேற்கே கர்நாடகத்தின் சாம்ராஜ் மாவட்டத்தையும் எல்லைகளாகக் கொண்டது. இதன் மொத்த நிலப்பரப்பளவு 4497.77 சதுர கி.மீ. ஆகும். இதில் மொத்த வனப்பரப்பளவு காப்புக்காடுகள் மற்றும் காப்பு நிலத்தையும் சேர்த்து 892.78 சதுர கி.மீ. அளவில் உள்ளது. இந்த வனக் கோட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம் ஹொகேனக்கல் என நான்கு சரகங்களை கொண்டுள்ளது. அத்துடன் ஊரக விறகுக் கோட்டம், நிலஅளவை மற்றும் குறியீட்டுச் சரகம் என தருமபுரியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது
தருமபுரி வனக்கோட்டத்திலுள்ள வனங்களின் வகைகள்:
1. தெற்கு உலர்கலப்பு இலையுதிர் காடுகள் - The Southern Tropical Dry Mixed Deciduous Forest 5A/C3
2. சோரியா தாலூரா துணை வகைக்காடுகள் (வரையறுக்கப்படவில்லை)
    The Shorea talura sub – type (sub- type not classified) 5/E4 
3.   இரண்டாம் நிலை உலர்ந்த இலையுதிர் காடுகள் - The secondary Dry Deciduous Forest 5/E
4.   உலர் இலையுதிர் புதர்க்காடுகள் - The Dry Deciduous Scrub Forest 5/2S1
5.   உலர் இலையுதிர் புதர்க் காடுகள் - The Dry Deciduous Scrub Forest 5D/S1
6.   வெப்ப மண்டல நதி காடுகள் -  The Dry Tropical Riverine Forest 5/1S1
7.    உலர் தேக்கு காடுகள் - Very Dry Teak Forest 7/C1
8.   வெப்ப மண்டல பசுமை மாறா ஈரக் காடுகள் - The Tropical Evergreen Shola Forest 7/C1 
9.   தெற்கு வெப்ப மண்டல முட்காடுகள் - The Southern Thorn Forest 6A/C1 
1௦. தெற்கு வெப்ப மண்டல புதர் காடுகள் - The Southern Thorn Scrub Forest 6A/DS1

நன்றி: Tamil Nadu Forest Department
Dharmapuri Forest Division, Dharmapuri


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக