புதன், 28 நவம்பர், 2018

ஆர். முத்துக்கவுண்டர்


    
சேலம் மாவட்டம் வெள்ளாளப்பட்டி கிராமத்தில் 1918 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதியில் பிறந்தார். சென்னை பல்கலைக் கழகத்தில் பயின்றவர். இவர் பிரேமா என்பவரை 1948 ஆம் ஆண்டில் மணம் முடித்தார். இவருக்கு ௨ மகன்களும் 1 மகளும் உள்ளனர். விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். சிறந்த விவசாயியாக நெல், சோளம், நிலக்கடலை முதலான பயிர்களில் அதிக விளைச்சல் எடுத்தமைக்காக பல்வேறு பரிசுகளைப் பெற்றுள்ளார். இந்திய பாரளுமன்றத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது தேர்தல்களில் (1962-67 மற்றும்  1967-1971) தி.மு.க. சார்பில் வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் இவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் முறையே துரைசாமி கவுண்டர், டி.ஏ. வாஹித் ஆகியோரைத் தோற்கடித்துப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 
R.  முத்துக்கவுண்டர் 

இவர் மாநில விவசாயிகள் சங்கத்தின் நிர்வாக குழுவில் உறுப்பினராகவும், சேலம் மாவட்டத்தின் கிழங்கு பயிரிடுவோர் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். 
சோவியத் ரஷ்யா, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்வீடன், நெதர்லேண்ட், ஜப்பான், தெற்கு வியட்நாம், ஹவாய், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, சுவிட்சர்லாந்து முதலான நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அன்னாரது நூற்றாண்டு விழா மற்றும் 24 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி  22-9-2௦18 அன்று அரூரில் நடந்தது. இந்நிகழ்சியில் அமைச்சர்கள், பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், விவசாய சங்கத்தினர் மற்றும் கொங்கு பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டு  மரியாதை செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக