வியாழன், 29 நவம்பர், 2018

டில்லி பாபு.பி.



திரு. டில்லி பாபு.பி.,   2௦௦6 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தருமபுரி மாவட்டம், அரூர் (தனி) தொகுதியில், சி.பி.ஐ. (எம்) சார்பில் நின்று 71030 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த கே. கோவிந்தசாமியைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். தொடர்ந்து இதே தொகுதியில்  சி.பி.ஐ. (எம்) சார்பில் அ.இ.அ.தி.மு.க. கூட்டணியுடன் இணைந்து 2௦11 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 777௦3 வாக்குகள் பெற்று, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பி.எம். நந்தனை தோற்கடித்து வெற்றி பெற்றார். 
பூரிவாக்கம் என்ற ஊரில் பரமசிவம்-ஜெயம்மாள் தம்பதியினருக்கு 1965 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 -ந் தேதி பிறந்த இவர் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர். 1982 ஆம் ஆண்டு முதல் சி.பி.எம். கட்சியில் இணைந்த இவர் 1983 ஆம் ஆண்டு இந்திய மாணவர் சங்கத்தில் பொறுப்பு வகித்தார். இவர் தற்போது தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினராகவும், தருமபுரி மாவட்டத்தின் சி.பி.எம். கட்சியின் மாவட்ட செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
இவறது மனைவியின் பெயர் காளியம்மாள். இவருக்கு பிடரல் காஸ்ட்ரோ என்ற மகனும், அருனப்பிரியா என்ற மகளும் உள்ளனர்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக