செவ்வாய், 27 நவம்பர், 2018

தென்கரைக்கோட்டை

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி வட்டத்தில் உள்ளது, தென்கரைக்கோட்டை. இந்த ஊர்.   தென்கரைக்கோட்டை, தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி வட்டம்,  மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூராட்சியாகும். பாப்பிரெட்டிப்பட்டியிலிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவிலும் தருமபுரியில் இருந்து தென் கிழக்கே கடத்தூர் வழியாக 35 கி.மீ. தொலைவிலும் உள்ளது இந்த இங்குள்ள கோட்டைக்கு அருகில் ஜலகண்டீஸ்வரர் ஆறு உள்ளது. இவ்வாற்றிற்குத் தெற்கே கோட்டை அமைந்துள்ளதால் இது தென்கரைக்கோட்டை என்று அழைக்கப்படுகிறது. வடக்கே வடகரை எனும் ஊரும் உள்ளது. கி.பி. 1652 ஆம் ஆண்டு வரை பீஜப்பூர் சுல்தான்களின் வசம் இருந்த இக்கோட்டையை கண்டீவர நரசராச உடையார் என்பவரால் கைப்பற்றப்பட்டது. 12-2-1768 - இல் ஐதர் அலியின் கைக்கு வந்தது. அதே ஆண்டில் கர்னல் உட் என்பவர் கைக்குக் கிடைத்த முதல் கோட்டை தென்கரைகோட்டையே.  
 திப்பு சுல்தான், தாமஸ் மன்றோ காலத்தில் கூட இந்த தென்கரைக்கோட்டை முக்கிய நகரமாகத் திகழ்ந்தது. பழைய ஆவணங்களில் தென்கரைக் கோட்டை தாலுகா என்றே இருப்பதைக் காணமுடிகிறது. 1821 ஆம் ஆண்டு தென்கரைக்கோட்டை தனது தாலுகா என்னும் தகுதியை  இழந்தது. 
2009 ஆம் ஆண்டு முதல் இது தனி கிராம பஞ்சாயத்தாக உள்ளது. இந்த ஊராட்சியின் மொத்த பரப்பளவு 1314.61 ஹெக்டேராகும். இந்த பஞ்சாயத்திற்கு உட்பட்ட மொத்த குக்கிராமங்கள் 23. இது பாப்பிரெட்டிபட்டி வட்டத்திற்கு உட்பட்ட வருவாய்பிர்க்காகளில் ஒன்றாக விளங்கிவருகிறது. தென்கரைக்கோட்டை வருவாய் பிர்க்காக்களில் 34 வருவாய் கிராமங்கள் உள்ளன. 

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த ஊராட்சியில் மொத்த குடியிருப்புகள் 1079. மொத்த மக்கள்தொகை 5142. இதில் ஆண்கள் 2603 பெண்கள் 2539.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக