செவ்வாய், 27 நவம்பர், 2018

ச. கிருஷ்ணமூர்த்தி


     விழுப்புரம் மாவட்டத்தில் செய்யாறு வட்டத்தில் அனுக்காவூர் என்ற ஊருக்கு அருகில் விலாரிப்பட்டு என்ற கிராமத்தில் சடைசாமி - பூமாது தம்பதியினருக்கு மகனாக 4-4-1949 அன்று பிறந்த இவர் தனது பள்ளிப்படிப்பை சென்னை மாநகராட்சி பள்ளியில் முடித்தார். தமிழிலும் வரலாற்றிலும் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் தொல்பொருள் துறையில் ஓராண்டு பட்ட மேற்படிப்பு பட்டையம் பெற்றுள்ளார். 
     தஞ்சை மாவட்ட அருங்காட்சியகத்தில் பணியாற்றியபோது ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளும் கையெழுத்துப் பிரதிகளையும் தேடி திரட்டியுள்ளார்.  தொல்லியல், வரலாறு தொடர்பாகப் பல ஆய்வுக்கட்டுரைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் இவர் எழுதி வெளியிட்டுள்ளார். 
    இவர் தருமபுரி அரசு அருங்காட்சியகத்தில் தொல்பொருள் அதிகாரியாகப் பணியாற்றியபொது பல கல்வெட்டுகளையும், பெருங்கற்கால ஓவியங்களையும் சிற்பங்களையும் கண்டுபிடித்துள்ளார். 
     இவர் எழுதிய "தருமபுரிவரலாறும் பிரகலாத சரித்திரமும்" என்ற நூல் தருமபுரி மாவட்ட வரலாற்றை அறிந்துகொள்ள உதவும் முக்கியமான நூல் என்பதில் ஐயமில்லை.
      தற்போது இவர் பணியிலிருந்து ஓய்வு பெற்று சென்னையில் வசித்து வருகிறார்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக