செவ்வாய், 27 நவம்பர், 2018

தாமஸ் மன்றோ குளம்



தாமஸ் மன்றோ தர்மபுரியில் துணை ஆட்சியராக இருந்தபோது ஒரு குளம் வெட்டினார். இதற்கு மன்றோ சாஹிப் குளம் என்று பெயரிட்டு பொதுமக்கள் அழைத்தனர். மன்றோ சாப்பு குளம் என்று  வழக்கில் உள்ள இந்த குளத்தின் அருகில் அவ்வாறே அவர் உண்டாக்கிய தோட்டம் மன்றோ சாப்புத் தோட்டம் என்று வழங்கப்பட்டது.... சோழர் காலக் கல்வெட்டு இங்குள்ள படித்துறையில் இருப்பதால் இவர் இந்த குளத்தை புதுப்பித்திருக்கலாம்.

 (ஆதாரம்: தருமபுரி வரலாறும் பிரகலாத சரித்திரமும் – ச.கிருஷ்ணமூர்த்தி. பக்: 38-39).

தாமஸ் மன்றோ இறந்தவுடன் அவரது மனைவி வில் ஹெல்மினா தருமபுரியில் நினைவிடத்தை அமைத்துள்ளார். அந்த இடத்தில்தான் இப்போது தாமஸ் மன்றோ நினைவுத் தூண் உள்ளது.  இன்று அந்த தோட்டம் மறைந்து குளத்தின் பெயரும் "கான் சாகிப் குளம்" என்று மாறி தற்போது வழக்கத்தில் உள்ளது. இந்த குளம் தருமபுரி - திருப்பத்தூர்   மாநில நெடுஞ்சாலையில்  தருமபுரி நகரில் வேல் பால் டிப்போ அருகில் அமைந்துள்ளது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக