சனி, 1 டிசம்பர், 2018

தருமபுரி மாவட்டத்தில் பறவை இனங்கள்

     தருமபுரி மாவட்டத்தின் வனப்பகுதியானது, பிரம்மகிரி-நீலகிரி-மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இந்தப்பகுதி பல்லுயிர்பன்மம் நிறைந்ததாக உள்ளது. தாவர வகைளில் சந்தனம், தேக்கு, ரோஸ் வுட், செஞ்சந்தனம் முதலான பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரங்கள் மற்றும் மூலிகைகளில் 484 இனங்கள் பரவலாகக் காணக் கிடைகின்றன. அத்துடன் விலங்கினங்களில் யானை, சிறுத்தை, மான் முதலான வகைகளில்  1௦7 இனங்களும், ஊர்வனவற்றில் 57 இனங்களும், வண்ணத்துப்பூச்சியில் 361 இனங்களும், பறவை இனத்தில்  457 இனங்களும் இம்மாவட்டத்தில் உள்ளன. இங்கு தருமபுரி வனப்பகுதியில் சாதாரணமாகக் காணக்கூடிய பறவையினங்களில் சிலவற்றின் தமிழ், ஆங்கில, விலங்கியல் பெயர்களின் (அடைப்பு குறிக்குள் கொடுக்கப்பட்டவை) பட்டியலை தமிழக அரசின் வனைத்துறை 
வெளியீடான "தருமபுரி மாவட்டத்தில் உள்ள பறவைகள்" என்ற  ஆங்கிலக் கையேட்டில் இருந்து தரப்பட்டுள்ளன.
1.    சிறு முக்குளிப்பான்  Little grebe (Tachybaptus ruficollis) 
2.     பெரிய நீர்க்காகம் Great cormorant (Phalacrocorax carbo) 
3.    சிறு முக்குளிப்பான்  Little grebe (Tachybaptus ruficollis)
4.   பெரிய நீர்க்காகம் Great cormorant (Phalacrocorax carbo)
5.    சின்ன நீர்க்காகம் Little cormorant (Microcarbo niger)  
6.    மடையான் Indian pondheron   (Ardeola grayii)
7.    கருங்கிரீட மடையான் Night herons (Nycticorax nycticorax)
8      உண்ணிக்கொக்கு Cattle egret (Bubulcus ibis) 
9.    வெண் கொக்கு Median egret  Ardea intermedia
10.  பெரிய கொக்கு Large egret  Ardea alba
11.   சின்னக் கொக்கு Little egret (Egretta garzetta) 
12.   உள்ளான் Common sandpiper  Actitis hypoleucos
13.   மீன்கொத்தி Common kingfisher  Alcedo atthis
14.      வெண்தொண்டை மீன்கொத்தி white-throated kingfisher  (Halcyon smyrnensis)
15.    பொரி மீன்கொத்தி/வெள்ளை மீன்கொத்தி/கரும்புள்ளி மீன்கொத்தி Pied kingfisher (Ceryle rudis) 
16.  கொடிக்கால் வாலாட்டி Forest wagtail (Dendronanthus indicus)
17.   வரி வாலாட்டிக் குருவி White browed wagtail  (Motacilla maderaspatensis)
18.  சாம்பல்நிற வாலாட்டிக் குருவி Grey wagtail  (Motacilla cinerea)
19.   வலசை வாலாட்டி Yellow wagtail (Motacilla flava) 
20.   வெள்ளை வாலாட்டிக் குருவி White wagtail  (Motacilla alba)
21.   சம்புக்கோழி /வெள்ளை நெஞ்சு நீர்க்கோழி White-breasted waterhen  (Amaurornis phoenicurus)
22.    நாமக்கோழி/கருநாரை  Common coot  (Fulica atra)
23.    தாழைக் கோழி Common moorhen  (Gallinula chloropus)
24.    கருஞ்சிவப்பு முதுகுக் கீச்சான் Bay-backed shrike  (Lanius vittatus)
25.    தவிட்டுப்புறா Red Turtle-dove  (Streptopelia tanquebarica)
26.    மணிப்புறா Spotted dove   (Streptopelia chinensis)
27.    மரகதப்புறா Emerald dove   (Chalcophaps indica)
28.    மாடப்புறா Blue rock pigeon  (Columba livia)
29.    பச்சைக்கிளி Rose ringed parakeet  (Psittacula krameri)
30.    அக்காக்குயில் Common hawk-cuckoo  (Hierococcyx varius)
31.    குயில் cuckoo  (Cuculus canorus)
32.    சுடலைக் குயில் Pied crested cuckoo  (Clamator jacobinus)
33.    ஆசியக் குயில் Asian Koel  (Eudynamys scolopaceus)
34.    நீல முகப் பூங்குயில் Blue-faced malkoha (Phaenicophaeus  viridirostri)
35.    பசுஞ் சொண்டுப் பூங்குயில் Green-billed malkoha  (Phaenicophaeus tristis)
36.    செம்போத்து Greater Coucal   (Centropus sinensis)
37.    செம்பருந்து Brahminy kite   (Haliastur indus)
38.    கள்ளப் பருந்து/கரும்பருந்து Black kite   (Milvus migrans)
39.    சிறு கரும்பருந்து Black-shouldered kite  (Elanus axillaris)
40.   வல்லூறு vairi – shikra  (Accipiter badius)
41.    சிவப்பு வல்லூறு Common kestrel  (Falco tinnunculus)
42.    புதர்க்காடை Jungle bush quail  (Perdicula asiatica)
43    கருந்தலைச் சில்லை Black headed munia  (Lonchura atricapilla)
44    கௌதாரி Grey francolin  (Francolinus pondicerianus)
45.    வெள்ளைக் கானாங்கோழி  Grey junglefowl   (Gallus sonneratii)
46.    இந்திய மயில் Indian peafowl  (Pavo cristatus)
48    குறுங்காடை Common buttonquail   (Turnix sylvaticus)
49.   புள்ளி ஆந்தை Spotted owlet   (Athene brama)
50.   பொரிப்புள்ளி ஆந்தை Mottled wood owl   (Strix ocellata)
51.    பழுப்பு மரம் ஆந்தை Brown Wood Owl  (Strix leptogrammica)
52.   பெரிய காட்டு ஆந்தை Spot-bellied eagle-owl (Bubo nipalensis) 
53.   சிவந்த இறக்கை வானம்பாடி  Indian bush lark (Mirafra erythroptera)
54.    புதர் வானம்பாடி Bengal bush lark  (Mirafra assamica)
55     சாவுக் குருவி/சின்னப்பக்கி  Indian nightjar (Caprimulgus asiaticus)
56.    காட்டுப் பக்கி Jungle nightjar (Caprimulgus indicus)
57.    சாம்பல் மார்பக இளவரசன் Franklin's prinia (Prinia hodgsonii)
58.    சாம்பல் கதிர்க்குருவி Ashy prinia  (Prinia socialis)
59.    தையற்குருவி Common tailorbird  (Orthotomus sutorius)
60.    கொண்டை உழவாரன் Crested treeswift 
61.    நாட்டு உழவாரன் House swift  (Hemiprocne coronata)
62.    இந்திய சாம்பல் இருவாச்சி -  Indian grey hornbill  (Ocyceros birostris)
63.    செம்மார்புக் குக்குறுவான்/திட்டுவான் குருவி  - Coppersmith barbet (Psilopogon haemacephalus)
64.    கழுத்தறுத்தான் குருவி/வெண்கன்னக் குக்குறுவான் Small green barbet (Psilopogon viridis)
65     பொன்முதுகு மரங்கொத்தி Common goldenback woodpecker (Dinopium javanense)
66    பொன்முதுகு மரங்கொத்தி Lesser Goldenback woodpecker (Dinopium benghalense)
67.    செதிள்வயிற்று மரங்கொத்தி Streak-throated woodpecker  (Picus xanthopygaeus)
68.    தகைவிலான்/தகைவிலாங் குருவி Common swallow  (Hirundo rustica)
69.    கருந்தலை மாங்குயில்  Black-headed oriole (Oriolus larvatus)
70.   சாம்பல் தலை வானம்பாடி/ நெல் குருவி Ashy-crowned sparrow-lark  (Eremopterix griseus)
71    இரட்டைவால் குருவி/கரிக்குருவி - Black drongo (Dicrurus macrocercus)
72.   வெள்ளை வயிற்றுக் கரிச்சான்  White bellied drongo  (Dicrurus caerulescens)
73.   கருங்கொண்டை நாகணவாய் Brahminy starling  (Sturnia pagodarum)
74.   மைனா - Common myna  (Acridotheres tristis)
75.   பனங்காடை/ பாலக்குருவி Indian roller  (Coracias benghalensis)
76.   காட்டுக் கீச்சான்- Common woodshrike  (Tephrodornis pondicerianus)
77.  குயில் கீச்சான் -  Large cuckoo-shrike  (Coracina macei)
78.  கருந்தலைக் குயில்/கீச்சான்-  Black headed cuckoo-shrike  (Coracina melanoptera)
79.    குங்குமப் பூச்சிட்டு Scarlet minivet  (Pericrocotus speciosus)
80.    சிறிய மின்சிட்டு Small minivet  (Pericrocotus cinnamomeus)
81.    மாம்பழச்சிட்டு - Common iora  (Aegithina tiphia)
82.   பச்சைச்சிட்டு - Golden fronted leaf  (Chloropsis aurifrons)
83.   சின்னான்/கொண்டைக்குருவி  Red vented bulbul  (Pycnonotus cafer)
84.    சிவப்புமீசைச் சின்னான்-Red-whiskered bulbul  (Pycnonotus jocosus)
85.   தவிட்டிச் சிலம்பன் - Common babbler  (Turdoides caudata)
86.    புள்ளி ச் சிலம்பன் - Spotted babbler (Pellorneum ruficeps) 
87.    காகம் - House crow  (Corvus splendens)
88.    இந்திய காட்டுக்காகம் -  Indian jungle crow  (Corvus culminatus)
89.    வால் காக்கை/அரிகாடை/முக்குறுணி/ மாம்பழத்தான் குருவி - Indian treepie (Dendrocitta vagabunda) 
90.     செந்தலைப் பஞ்சுருட்டான்-Chestnut-headed bee-eater (Merops leschenaulti)
91.    சிறிய பச்சைப் பஞ்சுருட்டான்/பச்சை ஈப்பிடிப்பான் Small green bee-eater (Merops orientalis)
92.  சிட்டுக்குருவி - House Sparrow (Passer domesticus)
93.   கருஞ்சிட்டு - Indian robin (Copsychus fulicatus)
94.   வண்ணாத்திக்குருவி/குண்டுக்கரிச்சான்- Oriental magpie-robin  (Copsychus saularis)
95.  கருப்பு வெள்ளைப் புதர்ச்சிட்டு - Pied bushchat (Saxicola caprata)
96.   கொண்டலாத்தி - Common Hoopoe (Upupa epops)  
97.  சிவப்பு மூக்கு ஆள்காட்டி - Red-wattled lapwing (Vanellus indicus)
98.  மஞ்சள் மூக்கு ஆள்காட்டி - Yellow-wattled Lapwing  (Vanellus malabaricus)
99.  அரசவால் ஈப்பிடிப்பான் - Asian paradise flycatcher   (Terpsiphone paradis)
100. ஊதாத் தேன்சிட்டு - purple sunbird (Cinnyris asiaticus)  
101. ஊதாப்பிட்டத் தேன்சிட்டு - purple-rumped sunbird (Leptocoma zeylonica)  
102.  தூக்கணாங்குருவி - baya weaver (Ploceus philippinus)

நன்றி: தருமபுரி வனப்பகுதியிலுள்ள பறவையினங்கள்
தமிழ்நாடு அரசு - வனத்துறை வெளியீடு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக