வெள்ளி, 7 அக்டோபர், 2016

நாகாவதி அணை



நாகாவதி அணை:
(Nagavathi Reservoir Project)
 

நாகாவதி நீர்தேக்கத்திட்டம், தமிழக அரசால் 26-03-1980 அன்று 3.13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டனநாகவதியை அடுத்த அரகாசனஹள்ளி, சின்னம்பள்ளி. பெரும்பாலை உள்ளிட்ட பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று  12-12-1987 அன்று நாகவதி அணை திறக்கப்பட்டது. 
நாகாவதி ஆறு காவிரி ஆற்றின் ஒரு சிறிய உப நதியாகும்இந்த ஆறு  தருமபுரியின் மலைப்பகுதிகளில் உற்பத்தியாகி தென்மேற்கு திசையில் ஓடி மேட்டூர் அணைக்கு மேற்கே  கலக்கிறது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு  பருவகாலங்களில்  பெய்யும் மழைநீர் நாகாவதி ஆற்றுக்கு வருகிறது
நாகாவதி அணை தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்தில் ஏலகிரியிலிருந்து எர்ரபட்டி கிராமத்தின் அருகே, எர்ரப்பட்டியிலிருந்து  6 கி.மீ தொலைவில் நாகாவதி காப்புக்காட்டில் உள்ளது.  
இந்த மண் அணையின் நீளம் 288 மீ. அணையின் அதிகபட்ச உயரம் 7.5 மீ. இதன் உபரி நீர்போக்கியின் நீளம் 94 மீ. இதன் மூலம் அணையிலிருந்து வினாடிக்கு 20.46 கன அடி நீர் வெளியேற்றமுடியும்இதன் தலைமதகிலிருந்து கால்வாய் 1 ஆரம்பிக்கிறதுஇதிலிருந்து சுமார் 2 கி.மீ. அப்பால் வலதுபுறக் கால்வாய் பிரிகிறது. அதன் 5.525 கி.மீ. ல் இடதுபுறக் கால்வாய் 2 பிரிகிறது. பிரதானக் கால்வாயிலிருந்து வயற்கண்ணிகள்  ஆரம்பிக்கும்வரை  எல்லா கால்வாய்களும் நீர் வீணாவதைத் தடுக்கும்பொருட்டு சிமெண்ட் தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அணையின் முழு கொள்ளளவு 164.3 மி..அடி. இதன் அதிகபட்ச நீர்மட்டம் 356.50 மீ. இதன் இடதுபுறக்க கால்வாய்நீளம்  6.2 கி.மீ. இதனால் பயன்பெறும் ஆயக்கட்டு 287 ஏக்கர். இடதுபுறக் கால்வாய் 2 ன் நீளம் 10.97 கி.மீ. பயன்பெறும் ஆயக்கட்டு 732 ஏக்கர்வலது புறக்கால்வாய் 18.98 கி.மீ. பயன்பெறும் ஆயக்கட்டு 974 ஏக்கர்
 இந்த அணையின் மூலம் பயன்பெறும் கிராமங்கள் பென்னாகரம் வட்டத்திலுள்ள அரகாசனஹள்ளி, (417.77  ஏக்கர்), சின்னபள்ளி (722.61 ஏக்கர்), பெரும்பாலை (852.62 ஏக்கர்) ஆகிய மூன்று  கிராமங்களில் இரண்டு போக புஞ்சை விவசாயத்திற்கு நீர் பாசன  வசதி கிடைக்கும்
கடந்த 28 ஆண்டுகளில் 12-12-2015 அன்று 8-ஆவது முறையாக அணை நிரம்பியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக