செவ்வாய், 4 அக்டோபர், 2016

கேசர்க்குழி அள்ளா அணை

கேசர்க்குழி அள்ளா அணை:

(Kesarkuzhihalla Reservoir Project)
 


    கேசர்க்குழி அள்ளா அணை, தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் திருமல்வாடி  கிராமத்திலுள்ள பேளுஅள்ளி அருகே கேசர்க்குழி அள்ளா ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணை தமிழக  அரசால் 1981 ஆம் ஆண்டு 2.8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அணையாகும். 
   நீரியல்: கேசர்க்குழி அள்ளா ஆறு கடல் மட்டத்திலிருந்து 1220 மீட்டர்  உயரத்தில் உள்ள கள்ளிக்காட்டு வனம்  காட்டிலுள்ள மலையில் உற்பத்தியாகி 25 கி.மீ. தூரம் பயணித்து காவிரி ஆற்றின் துணை நதியாகிய சனத்குமார நதி எனப்படும் சின்னாற்றில் கலக்கிறது.       
        கேசர்க்குழி அள்ளா  மண் அணை கட்டின் நீளம் 1370 மீட்டர்.  அகலம் 3.65 மீ.  இதன் இரண்டு நீர் போக்கிகளைக் கொண்டு (அளவு 12.20மீ. , 6.10 மீ.) வினாடிக்கு 464.165 கன மீ. நீரை வெளியேற்றலாம். இந்த அணையின் தனி நீர் பிடிப்பு பகுதி  பரப்பளவு 52.75 சதுர கி.மீ. ஆகும்.  இதன் மொத்த கொள்ளளவு 3.80 மி. கன மீ.  உபயோக கொள்ளளவு 3.57 மி.கன மீ. இந்த அணையின் முழு நீர்மட்டம் 585.70 மீ.  நீர்பிடி பரப்பு 10582 ஹெக்டர். அணையின் மேல்மட்டம் 587.70 மீ.  ஆழம் 7.70 மீ. 
   இந்த அணையின் இடதுபுறம் ஒரு மதகும்,  வலது இடது என இரண்டு கால்வாய்களும் உள்ளன. 
    இடது புறம் உள்ள மதகின் மூலம் வினாடிக்கு 1.10 கனமீ  நீர் வெளியேற்ற இயலும். இந்த மதகின் மூலம் 1579.10 ஹெக்டர் நிலம் பாசன வசதி பெறும். இதன் அப்பார்ட்மென்ட் மதகின் மூலம் பயன்பெறும் ஆயக்கட்டு 39.70 ஹெக்டர்.
    வலது கால்வாயின் நீளம் 4.60 கி.மீ. இதன் மூலம் பயன் பெறும் ஆயக்கட்டு 229.87 ஹெக்டர். இடது கால்வாயின் நீளம் 8.75கி.மீ. இதன் மூலம் பயன் பெறும் ஆயக்கட்டு 516.88 ஹெக்டர். 
      இந்த அணையால் பயன்பெறும் கிராமங்கள் திருமல்வாடி, பெலமாரஹள்ளி, 
பேளுஹள்ளி, சீரானஹள்ளி, எரக்கட்டஹள்ளி, பூதிஹள்ளி  கிராமங்களில் மொத்தம் 1618.78 ஹெக்டர் புஞ்சை பாசன நிலங்கள் பயன்பெறும்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக