செவ்வாய், 4 அக்டோபர், 2016

இன்றைய தருமபுரி மாவட்டம்:



இன்றைய தருமபுரி மாவட்டம்





சேலம் மாவட்டம் பாண்டிய, பல்லவ, சோழ மற்றும் ஹொய்சால ராஜ்ஜியத்தின் கீழ் ஆளப்பட்டு வந்தது. 14 வது நூற்றாண்டில் மாலிக்காபூர் ஆட்சியின் கீழ் சேலம் மாவட்டம் நிர்வகிக்கப்பட்டது. 55 ஆண்டுகளுக்கு பின் விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் கீழ் கொண்டு வரப் பட்டது. பின் சேலம் கோட்டையினை ஹைதர் அலி கைப்பற்றினார். பின் திப்புசுல்தானின் தோல்விக்குப் பிறகு 1772ம் ஆண்டில் சேலம் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தின் கீழ் வந்ததுபிரிட்டிஷ் கிழக்கிந்திய படைக்கும் திப்புசுல்தானுக்கும் இடையே 1792ல் நடந்த போரைத் தொடர்ந்து ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் திப்புசுல்தானிடம் இருந்து பெறப்பட்ட பகுதிகளைக் கொண்டு பாராமஹால் மற்றும் சேலம் மாவட்டம் 1792ல் உருவாக்கப்பட்டது.  
இந்திய தேசத்தின் மிகப்பெரிய மாவட்டமாக சேலம் மாவட்டம் 1792 ஆம் ஆண்டு  ஏப்ரல் மாதம் 4-ந்தேதி உருவானது. 1801ல் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம் பிரிக்கப்பட்டதுஇன்றைய சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய ஏறத்தாழ 7530 சதுர கி. .பரப்பளவை  உடைய  அன்றைய  சேலம் மாவட்டம் மூன்று பெரிய மண்டலங்களைக் கொண்டிருந்தது. 
1965 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ந்தேதி, அப்போதைய    சேலம் மாவட்டத்திலிருந்து தர்மபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு சென்னை மாகாணத்தில்புதிதாக உருவாக்கப்பட்ட முதல் மாவட்டம் தருமபுரி மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டமும் அடங்கும்.   இம் மாவட்டம் ஏறத்தாழ 9640.77 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டது.
தருமபுரி மாவட்டத்திலிருந்து  2004 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி  அன்று   தருமபுரியிலிருந்த 7 வருவாய் வட்டங்களை தனியே பிரித்து கிருஷ்ணகிரி மாவட்டமாக தமிழக அரசால் 30 ஆவது மாவட்டமாக உருவாக்கப்பட்டது. தற்போதைய தருமபுரி மாவட்டத்தின் பரப்பளவு 4497.77 ச.கி.மீ.   இது மொத்த தமிழ் நாட்டின் பரப்பளவில் சுமார் 3.46 சதவீதமாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக