திங்கள், 3 அக்டோபர், 2016

தொப்பையாறு அணை

தொப்பையாறு அணை


(Thoppaiyaru Reservoir Project)
  






  தொப்பையாறு சேர்வராயன் மலைப்பகுதியில் ஆரம்பித்து  தென்மேற்கு முகமாகப் பாய்ந்து  நீர்த்தேக்கத்தில் கலக்கிறது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு  காலங்களில் பெய்யும் மழைநீர்   தொப்பையாற்றில் சேர்க்கிறது. 
   தொப்பையாற்றின் குறுக்கே, தருமபுரி-சேலம்  நெடுஞ்சாலை (எண் :7)  யில் தொப்பூருக்கு 8 கி.மீ. தொலைவில் உள்ள உப்பாளம்மன்  அமைந்துள்ளது இந்த நீர்த்தேக்க அணை. 2.7.1980 அன்று இந்த நீர்த்தேக்கம் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின்னர் 17-6-1986 ஆம் தேதி மறுமதிப்பீட்டில் சுமார் 5.92  ரூபாயில் ஆரம்பிக்கப்பட்டு 1987 அணை கட்டிமுடிக்கப்பட்டது.
   இந்த மண் அணையின்மொத்த நீளம் 435 மீ.  அதிகபட்ச உயரம் 15.30 மீ. அணையின் மேல்மட்டம் 435 மீ.   முழு கொள்ளளவு 298 மி.கன அடியாகும்.  முழு நீர்மட்டம் மற்றும் அதிகபட்ச நீர்மட்டம் 365.6 மீ.  இந்த அணையின் மூலம் பாசன நீர் விடப்பட்டு ஆற்றின் 5 கி.மீ. தூரத்தில் ஆற்றின் குறுக்கே ஒரு பிக்கப் அணை  அதிலிருந்து ஒரு தலைமதகு மூலம் தண்ணீர் பாசனத்திற்கு அனுப்பப்படுகிறது. முதலில் வலது புறம் மட்டும் ஒரு கால்வாய் ஆரம்பித்து  பின்பு அதனின்று இடதுபுறக்கால்வாய் தனியாகப் பிரிந்துசெல்கிறது. வலது கால்வாயின் நீளம் 17.85 கி.மீ. இதன் இடது கால்வாயின் நீளம் 24.20 கி.மீ. 
 இந்த அணையினால்  தருமபுரி மாவட்டத்தில் தொப்பூர், கம்மம்பட்டி ஆகிய கிராமங்களில் சுமார் 2050 ஏக்கர் புஞ்சை நிலங்களும் சேலம் மாவட்டத்தில் மேட்டூர் வட்டத்தில் செக்காரப்பட்டி, வெள்ளார், தீர்த்தகிரிபட்டி, மல்லிக்குண்டம் ஆகிய கிராமங்களில் 3280 ஏக்கர் புஞ்சை நிலங்களும் இருபோக சாகுபடிக்கு நீர்ப்பாசன வசதி கிடைக்கும். 
 இதன் கால்வாய்கள் மூலம் சுமார் 5280 ஏக்கர் நிலப்பரப்பு புஞ்சை நிலங்கள் இருபோக பாசானவசதி கிடைக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக