வெள்ளி, 7 அக்டோபர், 2016

ஈச்சம்பாடி அணை



ஈச்சம்பாடி அணை:

(Echampadi Reservoir Project)
ஈச்சம்பாடி அணை









ஈச்சம்பாடி நீர்தேக்கத்திட்டம் 1980 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் தேதி அன்று ரூபாய் 2.38 கோடி செலவில் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் திருத்திய மதிப்பீடாக 3.75 கோடி ரூபாயில் பணிகள் நிறைவுற்று 17-5-1985 ஆம் தேதியன்று அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டது.
தென்பென்னையாற்றிலிருந்து வரும் அதிகப்படியான நீரை ஆற்றின் குறுக்கே அணையில் தேக்கி வைத்து இதன் இடது வலது கால்வாய்கள் மூலம் அரூர் வட்டம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஊத்தங்கரை வட்டம் ஆகிய இரண்டு வட்டங்களில் உள்ள 32 கிராமங்கள் பயன்பெறும் வகையில் அரூர் வட்டம் ஈச்சம்பாடி கிராமத்தின் அருகே, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே இந்த நீர்த்தேக்கம் கட்டப்பட்டுள்ளது.
இந்த அணையின் மொத்த நீளம் 228.20 மீ. இது வலது இடது என இரண்டு தலைமதகுகளைக் கொண்டுள்ளது.
கால்வாய்கள்:
வலது கால்வாயின் நீளம் 30.39கி. மீ. இக்கால்வாயின் மூலம் 3000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இடது கால்வாயின் நீளம் 26.15கி.மீ. இக்கால்வாயின் மூலம் 3250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இந்த நீர்த்தேக்கத்தின் மூலம் பயன்பெறும் கிராமங்கள்:
அரூர் வட்டத்தில் இடதுபுறக் கால்வாய்:  அக்ரஹாரம்
வலதுபுறக் கால்வாய்: ஈச்சம்பாடி, அக்ரஹாரம், கெட்டுபட்டி, செம்மாண்டஹள்ளி, எலவடை,பாளையம்,பள்ளிபட்டி, காட்டம்பட்டி, வேலாம்பட்டி, சிங்கிரிபட்டி.
ஊத்தங்கரை வட்டத்தில்
இடதுபுறக் கால்வாய்:  பெரியகோட்டுப்பள்ளம், பச்சனம்பட்டி, சொரக்காபட்டி, வெள்ளாளப்பட்டி, வேலாம்பட்டி, மேட்டுத்தாங்கல், கொல்லப்பட்டி, சந்தாரப்பட்டி, காட்டுசிங்காரப்பட்டி, பெருமாள் நாயக்கன்பட்டி, ஊமைகவுண்டன்பட்டி, வேடப்பட்டி, சென்கான்பட்டி, கிட்டம்பட்டி, கோணல்பட்டி, முருக்கந்தாள், அம்மாபேட்டை.
வலதுபுறக் கால்வாய்: வானம்பட்டி, காட்டனூர், வீரானகுப்பம், கதிரம்பட்டி.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக