வெள்ளி, 7 அக்டோபர், 2016

மோதூர்



மோதூர்:
 
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், திருமல்வாடியை ஒட்டிய கிராமம் மோதூர். இந்த ஊர், சுமார் 10,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

புதிய கற்காலத்தைச் (Neolithic age) சேர்ந்த கருப்பு மற்றும் சிகப்பு வண்ண மன்பாண்டங்களின் உடைந்தத் துண்டுகள், சுமார் 3000 ஆண்டுகள் பழமைவாய்ந்த பழுப்பு நிற மண் பாண்டங்கள் இங்குக் கிடைத்துள்ளன.
புதிய கற்கால மக்கள் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தனர் என்பது வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து. மோதூர் கிராமத்தில் புதிய கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான எச்சங்கள் கிடைத்திருக்கின்றன.
மேலும் இங்கு இரண்டு ஹொய்சாளர் காலத்திய இரண்டு கல்வெட்டுகளுடன் கூடிய நடுகற்கள் கிடைத்துள்ளன. இருபதுக்கும் மேற்பட்ட பெருங்கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாக குத்துக்கல் வகையைச் சார்ந்த நினைவுச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த சோழ மன்னனது கல்வெட்டு ஒன்றும் இங்கு கிடைத்துள்ளது. அதில் சோழர்கள் திருமணத்திற்கு வரிவிதித்த செய்திகள் காணப்படுகின்றன.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக