வெள்ளி, 7 அக்டோபர், 2016

தும்பளஹள்ளி நீர்தேக்கத் திட்டம்



தும்பளஹள்ளி நீர்தேக்கத் திட்டம்:

Thumbalahalli Reservoir Project
தும்பளஹள்ளி நீர்தேக்கத் திட்டம்
 தும்பளஹள்ளி நீர்தேக்கத் திட்டம், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், தும்பளஹள்ளி கிராமத்திலிருந்து 1.20 கி.மீ வடகிழக்கே, பூலாப்பட்டி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது.

பூலாப்பட்டி ஆறு கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள இராயக்கோட்டை மலைப்பகுதியில் உற்பத்தியாகி 55.60 கி.மீ பாய்ந்து, கம்பைநல்லூர் அருகே தென்பெண்ணையாற்றின் உபநதியான கம்பைநல்லூர் ஆற்றில் கலக்கிறது.
இந்த நீர்தேக்கத்தின் தனி நீர் பிடிப்பு 30.49 ச.மைல்கள். மொத்த நீர்ப்பரப்பு 87.77 ச.மைல்கள். மொத்தம் கிடைக்கக்கூடிய நீரின் அளவு 307.78 மி.கன அடி. இத்திட்டத்தில் பாசனத்திற்கு தேவைப்படும் நீரின் அளவு 250.00 மி.கன அடி.  ஏற்கனவே பூலாப்பட்டி ஆற்றில் இந்நீர்த் தேக்கத்தின் மேல்புறம் 11 அணைக்கட்டுகளும் கீழ்புறம் 9 அணைக்கட்டுகளும் உள்ளது. இந்நீர்த்தேக்கம் கட்டப்படுவதால் கீழ்புறம் உள்ள பழைய ஆயக்கட்டுகள் ஏதும்பாதிக்கப்படுவதில்லை. மாறாக 3.26 ஏக்கர் பரப்பிற்கு பாசன வசதி உறுதி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இரண்டு பருவ மழைக்காலங்களில் இநீர்த்தேக்கத்திற்குத் தேவையான அளவு நீர் கிடைக்கிறது. இத்திட்டம் 21-9-1979 இல் துவக்கப்பெற்று 1983 ஜூன் மாதம் முடிவுற்றது.
இத்திட்டத்தினால் பயன்பெறும் புதிய பாசனப்பரப்பு 2184 ஏக்கரில் ஏற்கனவே நீர்த்தேக்கத்தின் கீழ்புறத்திலுள்ள பதிவு செய்யப்பட்ட பழைய ஆற்றுப்பாசனப் பரப்பு 326   எக்கர்களும் மேலும் பதிவு செய்யப்பட்டு  வசதியடையாமல் இருக்கும் 107 ஏக்கர் ஆயக்கட்டுகளுக்கு பாசன வசதி பெறுகிறது.
பயனடையும் கிராமங்கள்:
கொட்டுமாரனஹள்ளி, நாகனம்பட்டி, கேரகொடஹள்ளி, காரிமங்கலம், அடிலம்.
இந்த நீர்த்தேக்கத்தின் மொத்த நீளம் 1095 மீ. அணையின் அதிகபட்ச உயரம் 12.30 மீ. அணையின் மேல்பகுதி அகலம் 3.65 மீ.
அணையின் உபரி நீர்ப்போக்கி ஆற்றின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் மறு புறமும் மண் அணை அமைக்கப்பட்டுள்ளது. அணையின் இடது மற்றும் வலது பக்கங்களில் இரு தலை மதகுகள் அமைக்கப்பட்டு பாசன கால்வாய்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. பழைய நிலங்களில் பாசனத்தை உறுதி செய்ய உபரி போக்கியின் வலது பக்கத்தில் ஆற்று மதகு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அணையின் மொத்த கொள்ளளவு 3.71 மி.க.மீ.
அணையின் பாசன உபயோக கொள்ளளவு 3.24 மி.க.மீ.
ஆண்டின் இருமுறை அணையில் தேக்கப்படும் நீரின் அளவு 7.22 மி.க.மீ.
நீர்த்தேக்கப்பரப்பளவு  476 ஏக்கர்
அணையின் மிகுதி நீர்மட்ட உயரம்471.50 மீ.
அணையின் மேல்மட்ட அளவு 473.6 மீ.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக