திங்கள், 28 ஜனவரி, 2019

ஜாவளி



இசையரங்குகளில் இறுதி பகுதிகளில் பாடப்படும் எளிய பாட்டுகளில் ஜாவளியும் ஒன்று. பரதநாட்டியத்தில், நாயகன், நாயகியைப் பார்த்தோ அல்லது தோழிகள் நாயகியைப் பார்த்தோ ஜாவளிகளில் பாடுவதும் உண்டு. பல்லவி, அனுபல்லவி, சரணம் என்னும் யாப்பு அமைதிகள் இந்தப் பாடல்களில் உண்டு. சில ஜாவளிகளில் மூன்று, நான்கு சரணங்கள் கூட இருக்கும்.. சில ஜாவளிகளில் அனுபல்லவி இருக்காது. பாட்டு வரிகளில் சிறப்பாக தத்துவப் பொருள்களைக் காணமுடியாது. சிருங்காரம்,  காதல் மற்றும் காம ரசனையோடு இருக்கும் இந்த பாடல்கள், பெரும்பாலும் பேச்சு வழக்கில் (ஹிந்துஸ்தானி கஜல் பாடல்களைப் போன்று) எழுதப்பட்டவை.  ஜாவளிகளின் வர்ண மெட்டுகள் கவர்ச்சியாக உள்ளதால், அவைகளைக் கேட்க எல்லோருமே விரும்புவார்கள். செஞ்சுரிட்டி .கனடா, பேகடா,  சைந்தவி போன்ற ராகங்களிலேயே ஜாவளிகள் இயற்றப்பட்டன. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்த வகை தோன்றிற்று. தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் ஜாவாளிகளைக் காணலாம். ஜாவாளிகளை இயற்றியவர்களில் முக்கியமாக தருமபுரி சுப்பராயர் ஐயரையும், திருப்பனந்தாள் பட்டாபிராமையாவையும், இராமநாதபுரம் சீனிவாச ஐயங்காரையும் குறிப்பிடலாம். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக