திங்கள், 28 ஜனவரி, 2019

அப்பனஹள்ளி கோம்பை


தருமபுரி மாவட்டம், தருமபுரியை அருகேயுள்ள வத்தல்மலை நீர்பிடிப்புப் பகுதியில் உருவாகி வரும் சனத்குமார நதி வத்தல்மலை அடிவாரப் பகுதியிலுள்ள அப்பனஹள்ளி கோம்பை என்ற கிராமத்தில் ஆறாக ஓடத்தொடங்குகிறது. இங்கிருந்து இலளிகம், மிட்டாரெட்டி ஹள்ளி, வெங்கட்டம்பட்டி, இலக்கியம்பட்டி, அன்னசாகரம் ஆகிய ஏரிகளை நிரப்பிவிட்டு, தருமபுரி நகரிலுள்ள காமாட்சியம்மன் கோயில் தெரு அருகே உள்ள தடுப்பணையை நிரப்பிய பின் இராமக்காள் ஏரி, ரெட்ரி ஏரி, பக்கிரிக்குட்டை முதலான ஏரிகளைக் கடந்து கம்பைநல்லூர் ஆற்றில் கலந்து பின் தென்பெண்ணை ஆற்றில் சங்கமமாகிறது. எப்படி காவிரி ஆறு குடகுமலையில் உற்பத்தியாகி தலைக்காவிரி என்ற இடத்தில் இருந்து ஆறாக மாறி பயணிக்கிறதோ அவ்வாறே சனத்குமார நதியும் அப்பன ஹள்ளி கோம்பை என்ற இடத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பிக்கிறது என்று சொல்லலாம். (பார்க்க: சனத்குமார நதி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக