திங்கள், 28 ஜனவரி, 2019

சூலினி துர்க்கை, தீர்த்தமலை



அரூர் வட்டம், தீர்த்தமலை மீது துர்க்கைக்கு மிகவும் பழங்காலத்தில் கோயில் இருந்திருக்கிறது. இங்கு பல்லவர் காலத்திய துர்க்கை எட்டு கரங்களுடன் நின்ற நிலையில் அருள்பாலித்து வருகிறாள். துர்க்கையின் கரங்களில் சக்கரம், கத்தி, சங்கு, வில், கேடயம், மணி முதலியன இருக்கின்றன. இந்த சிற்பத்திலே “ஸ்ரீ பகவதி குருச்சூலி கோடுடைய” என்று வட்டெழுத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இதுபோல் தெய்வத்தின் பெயரும் அந்தச் சிற்பத்திலேயே எழுதப் பட்டிருப்பது அரிதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக