திங்கள், 28 ஜனவரி, 2019

காரிமங்கலம்


காரிமங்கலம் என்ற ஊர் “கோவிசைய மயீந்திர பருமற்கு ஏழாவது கோவூர் நாட்டுக்காரிமங்கலங் கங்கதி அரைசரோடு” என்ற ஆறாம் நூற்றாண்டு கல்வெட்டு மூலம் அறியவருகிறது. இந்தக் கல் வெட்டு குறிக்கும் காரிமங்கலம் அன்றிலிருந்து இன்றைய தினம் வரையிலும் அதே பெயரில் இயங்கிவருகிறது ஒரு சிறப்பிற்குரியது ஆகும். மேலும் செவிவழி செய்தியாகக் கூறும்பொழுது கடையெழு வள்ளல்களில் ஒருவரான காரியின் பெயரால் அமைந்தது என்றும் கூறுவர். காரியுந்தி என்ற சிவனின் பெயரில் அமைந்ததாகவும் குறிப்பிடலாம். அன்றைய அதியமான் ஆட்சிக்காலத்தில் அதியமான் பெருவழியில் இந்த ஊர் இருந்துள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 10 பேரூராட்சிகளில் காரிமங்கலம் பேரூராட்சியும் ஒன்று. சுமார் 35 ஆண்டுகளாக இந்த பேரூராட்சிக்கு இப்பகுதியை சேர்ந்த பி.சி. இராமன் தலைவராக இருந்துள்ளார். (பார்க்க: பி.சி.இராமன்).
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் பாலக்கோடு மற்றும் அரூர் வட்டங்களிலிருந்து காரிமங்கலம், பெரியாம்பட்டி, வெள்ளிச்சந்தை மற்றும் கம்பைநல்லூர் ஆகிய வருவாய் உள்வட்டங்களைப் பிரித்து காரிமங்கலம் வட்டம் என்ற புதிய வட்டம் காரிமங்கலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் நாள்  உருவாக்கப்பட்டது. 


காரிமங்கலம் வட்டம்தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டம், தருமபுரி மாவட்டத்தின் பாலக்கோடுமற்றும் அரூர் வட்டங்களைச் சீரமைத்து பிரித்துகாரிமங்கலம் பேரூராட்சியைத் தலைமையிடமாகக் கொண்டு 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் நாள் உருவாக்கப்பட்டது. இந்த வட்டத்தின் கீழ் 52 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]இவ்வட்டம் காரிமங்கலம்கம்பைநல்லூர்பெரியனஹள்ளி


காரிமங்கலம் வட்ட அலுவலகம் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக