திங்கள், 28 ஜனவரி, 2019

தருமபுரி சுப்பராயர் ஐயர்




19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி நகரிலிருந்து சேலம் செல்லும் சாலையில் உள்ள நல்லம்பள்ளியில் பிறந்து வளர்ந்தவர் தருமபுரி சுப்பராயர் ஐயர். இசையில் நல்ல பயிற்சியுடையவர். ஆனால் குரல் இனிமை இல்லாத காரணத்தால் இவரால் இசையரங்குகளில் சிறப்பிக்க முடியவில்லை. ஜாவளிகள் இயற்றுவதில் தனிச்சிறப்பு பெற்றார். ஜாவளி இசை வடிவத்தில் தெலுங்கு மொழியில் இவர் இயற்றிய பாடல்களால் இவர் மங்காத புகழ் பெற்றார். 
பிரபல பரத நாட்டியக் கலைஞர் திருமதி டி. பாலசரஸ்வதியின் பாட்டி திருமதி வீணை தனம் பல இசைக்கலைஞர்களை உருவாக்கியவர்., சுப்பராயர் ஐயர் வீணை தனத்தின் இசையின் ஈர்ப்பினால்  சென்னையில் அவர் வீட்டிலேயே தங்கி அவருக்கு சுமார் 60 ஜாவளிகள் கற்றுக்கொடுத்துள்ளார். இதில் குறிப்பிடத்தக்க ஜாவளிகளுள் ஒன்று, உணர்ச்சி ததும்பும் “சகிபிராணா” எனும் ஜாவளி ஆகும். “ஸ்மார சுந்தராங்குனி” என்ற ஜாவளி. வீணை தனம் அவர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் சுப்பராயர் இயற்றியதாகும்.  ஏனாதி சகோதரிகள் என்ற கலைஞர்களிடம் இவர் பணியாற்றியுள்ளார். இவர் எப்போதும் தனது படுக்கையில் தலையணைக்கடியில் ஒரு நோட்டுப்புத்தகம் வைத்துக்கொண்டு, தனது மனதில் தோன்றிய ஜாவளிகளை உடனே எழுதி வைத்துக்கொள்வாராம். இவரது மனைவி ஒரு பேட்டியில், சுப்பராயர் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரரை பக்தியுடன் வழிபடுவார் என்று குறிப்பிட்டுள்ளார். இவரது வம்சத்தில் யாரும் இசைக்கலைஞராகவில்லை. சுப்பராயரின் ஜாவாளிகளில் இவர் பிறந்து வளர்ந்த தருமபுரியை முத்திரையாகப் பயன்படுத்தி வந்தது கர்நாடக இசை உள்ளவரை, ஜாவாளிகள் இசையரங்குகளில் பாடப்படும் வரை, இவரது பெயரும், தருமபுரியின் புகழும் என்றும் நிலைத்திருக்கும். இவர் தனது 50 ஆம் வயதில் இயற்கை எய்தினார்.

இவரது புகழ் பெற்ற ஜாவளிகளுள் ஒன்று:
மொழி: தெலுங்கு
இராகம்: யமுனா கல்யாணி
தாளம்: தேசாதி

பல்லவி:
அடி னீபை மருலு கொன்னடிரா
(அடி)
சரணம்:
ராம ரக்ஹூ அபிராம ராம ராம
னீ ஸமமுணு கானகலேரா
(அடி)
தாடலலோ  னெரடாடவேள ஸ்ரீ
தர்மபுரீச டாமஸ மேலனூரா 
(அடி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக