திங்கள், 3 டிசம்பர், 2018

சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைசுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை 


தருமபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், அருகாமையிலுள்ள சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளிலுள்ள கரும்பு விவசாயிகள் பயன்பெறும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டது இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலை.

1987 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் நாள் கூட்டுறவு சங்கப் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு தியாகி சுப்பிரமணி சிவாவின் நினைவாக தருமபுரி மாவட்டத்திலுள்ள பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் ஆலாபுரத்தைஅடுத்த கோபாலபுரத்தில் 13-05-1990 அன்று அன்றைய முதல்வர் மாண்புமிகு திரு கருணாநிதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த ஆலை தருமபுரி நகரிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவிலும் சேலத்திலிருந்து 50 கி.மீ தொலைவிலும் சேலம்-வேலூர் சாலையிலிருந்து 5 கி.மீ தொலைவிலும் சுமார் 96.14  ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
2500 மெட்ரிக் டன் கரும்பு அறவைத்திறன் கொண்ட இந்த ஆலை சுமார் 33 கோடி ரூபாய் செலவில் கட்டிமுடிக்கப்பட்டு 01-10-1992 அன்று இந்த ஆலை தனது முதல் அரவையைத் தொடங்கியது. இந்த ஆலை ஐ.எஸ்.ஓ 9001-2000 தரச்சான்றிதழ்பெற்றது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக