வெள்ளி, 7 டிசம்பர், 2018

ஸ்ரீ லட்சுமி வரதராஜ சுவாமி திருக்கோவில், பெரியப்பட்டி, அரூர் வட்டம்

ஸ்ரீ லட்சுமி வரதராஜ சுவாமி திருக்கோவில், பெரியப்பட்டி 

கோவில்-முகப்புத்தோற்றம் 
கோவிலிலுள்ள நடுகற்கள் 



கருடத்தாழ்வார் 
ஹனுமன் 
அரிஹரன் 

                               





















தென்பெண்ணையாறு சாத்தனூர் அணைக்கு செல்வதற்கு முன                          
                                                               
தருமபுரி மாவட்டம்,  அரூர் வட்டத்தில் அரூர் - திருவண்ணாமலை சாலையில் நரிப்பள்ளிக்கு அருகில் சுமார் 2 கி.மீ. இல் உள்ளது பெரியப்பட்டி கிராமம். இந்த கிராமத்தின் வட எல்லையில் அமைந்துள்ளது ஸ்ரீ லட்சுமி வராஜராஜர் திருக்கோவில். இந்தக் கோவிலை ஒட்டியே தென்பெண்ணையாறு ஓடுகிறது. இங்கு, கல்ராயன்மலையில் உற்பத்தியாகும் கல்லாறு, வேலா னூர், சிட்டிலிங், கோட்டப்பட்டி , நரிப்பள்ளி வழியாக ஓடி  தென்பெண்ணையாற்றில் கலக்கிறது. தொடர்ந்து ஓடி சாத்தனூர் அணையை அடைகிறது. இங்கு தென்பெண்ணை மிகவும் பரந்துபட்ட அளவில் அகலமாக இருக்கிறது. இதைக்காணும்போது ஒரு காலத்தில் இவ்வளவு அகலமான நிலப்பரப்பில் ஓடிய ஆறு இன்று குறுகி ஓடைபோல ஓடுவதை எண்ணும்போது மிகவும் வேதனை அளிக்கிறது.ஊருக்கு ஒதுக்குபுறமான இடம் என்பதால் இந்த ஆற்றில் தங்குதடையின்றி மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. ஆற்றில் மணல் எடுத்து அருகிலுள்ள இடங்களில் பதுக்கிவைத்து கொஞ்சம்கொஞ்சமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனை யாரும் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. அமைதியான சூழ்நிலையில் காணப்படும் இந்தக்கோவிலில் உள்ள சிலை அருகிலுள்ள காப்புக்கட்டில் கிடந்தது என்றும் அதனைக் கண்ட மக்கள் அந்தச் சிலையை எடுத்துவந்து தற்போது கோவில் அமைந்துள்ள இடத்தில் வைத்து 
வழிபட்டு வந்ததாகவும், காலப்போக்கில் இந்த கோவிலை கட்டியதாகவும் சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலுக்கு குடமுழுக்கு செய்ததாகவும்  இங்குள்ளவர்கள்  சொல்கின்றனர். இந்தக் கோவிலுக்கு அருகாமையில் காப்புக்காடும் ஆறும் இருப்பதால் இந்தப் பகுதிக்கு வனவிலங்குகள் வருவது இயல்பு. காட்டிற்கு ஆடுமாடுகள்  மேய்க்கச் செல்கையில் விலங்குகளையும் மனிதர்களையும் வனவிலங்குகள் தாக்குவதும் நடக்கக்கூடியதே. இந்த கோவிலிலுள்ள  நடுகற்களில்  காணப்படும் புடை சிற்பங்களைக் கொண்டு இதனை உணர முடிகிறது.
விரும்புவோர் ஒருமுறை இங்கு சென்று வாருங்கள்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக