சனி, 8 டிசம்பர், 2018

தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி



தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி 
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தருமபுரி அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தை ஒட்டிய 29.32 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 2007-2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு மருத்துவக்கல்லூரியாக இயங்கும் என்று அறிவித்தது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை 16-07-2007 அன்று அரசாணை வெளியிட்டது. 
அரசின் ஆணைப்படி மரு .வி.கனகசபை சிறப்பு ஆணையாளராக நியமிக்கப்பட்டு கல்லூரியின் ஆரம்பிக்க முதற்கட்ட வேலைகள் 100கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2007 இல் தொடங்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைப் பணியாளர்கள் உட்பட அனைத்தையும் மருத்துவக் கல்வி இயக்ககத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது துணை முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் 19-01-2010 அன்று இக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து கட்டுமானப்பணிகள் முடியும் நிலையிலேயே 2008 ஆம் ஆண்டில் இந்திய மருத்துவக் கவுன்சில் ஆய்வு செய்து அனுமதி வழங்கியது. உடனேயே இந்த மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். சேர்க்கை தொடங்கியது. மாணவர்கள் தாங்கும் விடுதிகள் ஆன், பெண் எனது தனித்தனியாகக் கட்டப்பட்டு 2009 ஆம் ஆண்டு துவக்கத்திற்கு வந்தது. இந்த மருத்துவக்கல்லூரியின் மருத்துவமனையில் 500 படுக்கை வசதிகளுடன் Compulsory Rotatory Residential Internship (CRRI)  குடியிருப்புகளும் கட்டப்பட்டு 24-01-2012 அன்று அன்றைய முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா 21-01-2012 அன்று துவக்கி  வைத்தார். 
இந்தக் கல்லூரியில் மாநில பிரிவில் 85 மாணவர்களும் அனைத்திந்திய மாணவர்கள் பிரிவில் 15 மாணவர்களும் சேர்ந்து பயின்று வருகின்றனர்.  கல்லூரியில் விரிவுரையாளர்கள் அரங்கம், ஆடிட்டோரியம்,  உடற்கூறியல் ,உடலியல், உயிரி-வேதியியல், நோய் குறியியல்,  மருந்தியல், நுண்ணுயிரியல், தடயவியல் மருத்துவம், சமூக மருத்துவம் முதலான பிரிவுகள் இயங்கிவருகிறது. மேலும் ஓராண்டு செவிலியர் படிப்பும் இங்கு உள்ளது. நரம்பியல், சிறுநீரகவியல், இருதயம் முதலான பிரிவுகளையும் தொடங்க அரசுக்குப் பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. 
இந்தக் கல்லூரி மருத்துவமனைக்கு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை,வேலூர் ஆகிய நான்கு மாவட்டக்களிலிருந்தும் நோயாளிகள் வந்து சிகிச்சைப் பெற்றுக்கொள்கின்றனர்.  2000  புற நோயாளிகளும், 800க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் தங்கி சிகிச்சைப் பெற்றுச் செல்கின்றனர். இங்கு, அவசர சிகிச்சை, விபத்து அவசர சிகிச்சை, ஆன், பெண் பிரிவுகள், எலும்பு, பல், கண், பிரசவம், பச்சிளம் குழந்தைகள் என சுமார் 58 பிரிவுகள் இயங்கிவருகின்றன. மேலும்கண் வங்கி, போதை மறுவாழ்வு மையமும்  உள்ளன.  சுமார் 175 மருத்துவர்களும் 250 செவிலியர்களும் பணியில் உள்ளனர்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக