சனி, 1 டிசம்பர், 2018

தருமபுரி மாவட்டத்தில் உள்ள வண்ணத்துப்பூச்சி இனங்கள்


        தருமபுரி வனப்பகுதியில் சாதாரணமாகக் காணக்கூடிய வண்ணத்துப்பூச்சியினங்களில் 361 வகைகள் உள்ளன. அவைற்றில் தமிழக அரசின் வனைத்துறை  வெளியீடான "தருமபுரி மாவட்டத்தில் வண்ணத்துப்பூச்சிகள்" என்ற  ஆங்கிலக் கையேட்டில் தரப்பட்டுள்ள 62  வகை
களில் தமிழாக்கம் கிடைக்கப்பெற்ற சிலவற்றின் தமிழ், ஆங்கில, விலங்கியல் பெயர்களின் (சாய்வு எழுத்துக்களில் கொடுக்கப்பட்டவை) இங்கு தரப்பட்டுள்ளன.
  1.       ரோசா அழகி  Common Rose   Atrophaneura aristolochiae 
  2.       கறிவேப்பிலை அழகி Common Mormon Papilio polytes
  3.       சிவப்புடல் அழகி Crimson Rose Atrophaneura hector
  4.      கத்திவால் அழகி Spot Sword Tail Graphium nomius
  5.     எலுமிச்சை அழகி Lime Butterfly  Papilio demoleus
  6.      நெட்டிலி அழகி Common Bluebottle Graphium sarpedon
  7.     இந்திய ப்ளூ மோர்மான் Blue Mormon Papilio polymnestor
  8.    மஞ்சள் அழகி Common Jezebel  Delias eucharis
  9.    கொன்னை வெள்ளையன்  Common Emigrant   Catopsila crocale
  10.    புல் மஞ்சள் Common Grass Yellow  Eurema hecabe
  11.   ஒற்றை புள்ளி புள் மஞ்சள் - One Spot Grass Yellow Eurema andersoni
  12.    முப்புள்ளி புல் மஞ்சள்/மஞ்சள் புல்வெளியாள் Three Spotted Grass Yellow Eurema blanda
  13.    கருஞ்சிவப்பு நுனிச்சிறகன் Crimson Tip Colotis danae
  14.    வெளிர் சிவப்பு வெள்ளையன் Small Salmon Arab Colotis amata
  15.   சுற்றும் வெள்ளையன் Psyche Leptosia nina
  16.    வரி ஆமணக்குச்சிறகன்  Angled Castor  Ariadne ariadne
  17.    நீல வசீகரன் Blue Pansy Junonia orithiya
  18.    பழுப்பு வசீகரன் Lemon Pansy Junonia lemonias
  19.   வெண் கறுப்புச் சிறகன் Common Sailor Neptis hylas
  20.   புதர்ப் பழுப்பு/புதர் சிறகன் Common Bushbrown Mycalesis perseus
  21.   வெந்தய வரியன் Plain Tiger Danaus chrysippus
  22.   ஆரஞ்சு வரியன் - Striped Tiger Danaus genuita
  23.   நீல வரியன் Blue Tiger  Tirumala limniace
  24.   வெண்புள்ளிக் கருப்பன் Common Crow Euploea core
  25.  விகடன் Common Pierrrot Castalius rosimon
  26. வெள்ளிக்கம்பிக்காரி Common Silver Line Spindasis vulcanus
  27. சிவப்பு நீலன்/சிவப்பு விகடன் Red Pierrot Talicada nyseus 
நன்றி: Common Butterflies of Dharmapuri District
தமிழ்நாடு அரசு வனத்துறை வெளியீடு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக